Author: yalarasan canada
-

இளைஞர் வெட்டிக் கொலை !
காதல் விவகாரத்தால் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தப் பயங்கர சம்பவம் லுணுகம்வெஹர, பஞ்சி அப்புஜந்துர பிரதேசத்தில், இன்று(29) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் சிகிச்சைக்காக லுனுகம்வெஹர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்
-

முல்லைத்தீவில் சட்ட விரோத வியாபாரத்தில் ஈடுபட்டவர் கைது !
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மன்னாகண்டல் பகுதியில் அனுமதியற்ற முறையில் 22 மிசில் லோட் மணல்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் முக்கிய மணல் ஏற்றும் வியாபாரி ஒருவரை ஒட்டுசுட்டான் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த சந்தேகநபர் நேற்று(28.03.2024) மன்னாகண்டல் மற்றும் பேராற்று பகுதிகளில் இருந்து ஒரு இடத்தில் மணலினை சேகரித்து அதனை டிப்பரில் ஏற்ற முற்பட்ட வேளை கைதுசெய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்றும் ஒருவர் தப்பி ஓடியுள்ளதோடு 22 மிசின் லோட் மணல்கள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ஏற்ற முற்பட்ட…
-

ஈஸ்டர் தாக்குதல்! விசாரணைகளுக்கு தடையாக நிற்கும் கோட்டாபய !
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று பலமாதங்களின் பின்னர் அதிபரான கோட்டாபய ராஜபக்ச எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல் இழக்கச்செய்ததே…
-

அதிகரிக்கப்படவுள்ள சம்பளம் !
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் சம்பளங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதன்படி, குறித்த மாகாணத்தின் குறைந்த பட்ச சம்பளம் 65 சதங்களாக அதிகரிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பள அதிகரிப்பானது, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறைபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், தற்போது கனடாவில் மணித்தியாலம் ஒன்றுக்கு வழங்கப்படும் 16.55 டொலர் சம்பளம் 17.20 டொலர்களாக அதிகரிக்கப்பட உள்ளது.
-

அரச ஊழியர் ஒருவரின் முகம் சுழிக்கவைக்கும் செயல் !
திருகோணமலை-தொவனிபியவர பகுதியில் ஒன்பது வயது சிறுமிக்கு தனது அந்தரங்க உறுப்பை காட்டிய குற்றச்சாட்டின் பேரில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கைது சம்பவம் நேற்று (29) இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மஹதிவுல்வெவ -தெவனிபியவர பகுதியில் வசித்து வரும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 27 ஆம் திகதி சிறுமி தனியாக வீட்டில் இருந்த போது குறித்த நபர் அந்தரங்க உறுப்பை காட்டியதாக தாயாரிடம் கூறியதையடுத்து…
-

சற்றுமுன்னர் மட்டக்களப்பில் கோர விபத்து!
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி 4ம் கட்டை பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சிக்கி பலர் காயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சொகுசு பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த பேருந்து அதிகாலை 3.30 மணியளவில் 4ம் கட்டை பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி அருகிலுள்ள வர்த்தக நிலையங்கள் பலவற்றை உடைத்தெறிந்துள்ளது.விபத்தில் சாரதி உட்பட்ட பலர் பலத்த காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி வைத்தியசாலைகளுக்கு…
-

முட்டை இறக்குமதிக்கு தடை !
முட்டை இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அரச வர்த்தக இதர சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார். எனினும், பண்டிகைக் காலங்களில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 50 இலட்சம் முட்டைகள் நாட்டில் கையிருப்பில் உள்ளதாகவும், இதன் காரணமாக முட்டை இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.
-

புதுக்குடியிருப்பில் ஒருவர் கைது !
புதுக்குடியிருப்பு – உடையார்கட்டு குளப்பகுதியில் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன், சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதுக்குடியிருப்பு உடையார்கட்டு குளத்தின் அருகிலுள்ள காட்டு பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி இடம்பெற்று வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையினை பொலிஸ் நிலைய மது ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் முன்னெடுத்துள்ளனர். சுற்றிவளைப்பின் போது 56,000 மில்லிலீட்டர் கசிப்பும் , 3 பரல்களுக்குள் 75,000 மில்லிலீட்டர் எரிந்த கோடாவும்,…
-

தேவாலயங்களிற்கு விசேட பாதுகாப்பு!
நாட்டில் உள்ள கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு இன்று பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாளை மறுதினமும் (31) இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ மக்கள் இன்றையதினம் புனித வெள்ளி தினத்தை அனுஸ்டிப்பதுடன் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை ஈஸ்டர் தினத்தை கொண்டாடுகின்றனர். அந்தந்த தேவாலய அருட்தந்தைகளுடன் கலந்தாலோசித்து பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பாதுகாப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேவேளை, …
-

கனடா வரும் மாணவர்களுக்கான அறிவித்தல் !
கனடாவில் கல்வி கற்க உத்தேசிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதத்தில் மாணவர்களின் நலன்களை உறுதி செய்யும் வகையிலான திட்டமொன்றை கனடாவின் ஒன்றாரியோ அறிமுகம் செய்ய உள்ளது. கனடிய தொழிற்சந்தையில் போட்டித் தன்மை நிலவும் துறைசார் கற்கை நெறிகளுக்கு வெளிநாட்டு மாணவர்கள் உள்ளீர்க்கப்பட உள்ளனர். குறிப்பாக கற்கை நெறிகளில் தொழிற்சந்தை கேள்வியின் அடிப்படையிலான வீசா வழங்கும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. விருந்தோம்பல், சிறுவர் பராமரிப்பு, கணிதம், விஞ்ஞானம், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.…