Author: yalarasan canada
-

யாழில். கடற்தொழிலுக்கு சென்றவர் கடலில் மயங்கி விழுந்து உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலுக்கு சென்ற தொழிலாளி ஒருவர் நேற்றைய தினம் புதன்கிழமை கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். அல்லைப்பிட்டி 3ஆம் வட்டாரத்தை சேர்ந்த 58 வயதுடைய அந்தோணிப்பிள்ளை றோமன் மெய்ன்ரன் என்பவரே உயிரிழந்துள்ளார். கட்டுமரமொன்றில் மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்ற வேளை , கட்டுமரத்தில் இருந்து தவறி கடலினுள் விழுந்து உயிரிழந்துள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
-

யாழில் இருந்து சென்ற கார் திருகோணமலையில் விபத்து – சிறுமி உயிரிழப்பு
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த குடும்பம் ஒன்று பயணித்த கார் திருகோணமலை பகுதியில் விபத்துக்குள்ளானதில் சிறுமி உயிரிழந்துள்ளார். காரில், சிறுவன் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறையை சேர்ந்த கணவன் – மனைவி மற்றும் அவர்களது இரு பிள்ளைகளுடன் யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளை , திருகோணமலை ஈச்சிலம்பற்று பகுதியில் கார் வேக கட்டுப்பாட்டை இழந்து , வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. விபத்தில் கணவன் – மனைவி…
-

யாழில். வீடு புகுந்து தாக்கிய குற்றத்தில் கனடா வாசிகள் இருவர் கைது
யாழ்ப்பாணத்தில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கனடாவில் இருந்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்றைய தினம் திங்கட்கிழமை அத்துமீறி நுழைந்த இருவர் வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் , சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து ,விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் தாக்குதலாளிகள் இருவரையும் கைது செய்துள்ளனர்.…
-

இராணுவ வாகனம் மோதி யுவதி உயிரிழந்த சம்பவம் – இராணுவ சிப்பாய் விளக்கமறியலில்!
யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி யுவதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இராணுவ வாகன சாரதியான இராணுவ சிப்பாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். புத்தூர் – கனகம்புளியடி வீதியில் வீரவாணி சந்தியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை, இராணுவத்தினருக்கு சொந்தமான ஹயஸ் ரக வாகனம் வீதியோரமாக , வீதியை கடக்க துவிச்சக்கர வண்டியுடன் காத்திருந்த யுவதியை மோதி விபத்துக்கு உள்ளானதில் யுவதி உயிரிழந்திருந்தார். வாதரவத்தை பகுதியை சேர்ந்த சுதாகரன் சாருஜா (வயது 23) என்பவரே தனது 23ஆவது பிறந்தநாளான நேற்றைய…
-

யாழில். பொதுசுகாதார பரிசோதகர்களை உற்பத்தி நிலையத்தினுள் வைத்து பூட்டிய இருவர் கைது!
யாழ்ப்பாணத்தில் உணவு உற்பத்தி மையம் ஒன்றினுள் வைத்து பொது சுகாதார பரிசோதகர்கள் இருவரை பூட்டி வைத்த குற்றச்சாட்டில் ஆணொருவரும் பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பன்னாலை பகுதியில் இயங்கும் உணவு உற்பத்தி மையம் ஒன்றிற்கு சோதனை நடவடிக்கைக்காக நேற்றைய தினம் திங்கட்கிழமை இரண்டு பொது சுகாதார பரிசோதகர்கள் சென்றுள்ளனர். அதன்போது உற்பத்தி நிலையம் உரிய அனுமதிகள் பெறாது இயங்கி வந்ததமையும் , டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான சூழலை கொண்டிருந்தமையும் சுகாதார பரிசோதகர்கள் கண்டறிந்துள்ளனர். அதன் போது,…
-

யாழில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!
யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார். ஊரெழு கிழக்கை சேர்ந்த சிங்காரத்தினம் சசிக்குமார் (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
-

யாழில்.வாள் வெட்டில் இளைஞன் படுகாயம்!
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் ஒன்றில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் தொடர்பு பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தொல்புரம் பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் , வாள் வெட்டு சம்பவத்தில், பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரும் தொடர்பு பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
-

கனடாவில் கடலெனத் திரண்ட பெருந்திரளான மக்கள்!
கடலெனத் திரண்ட பெருந்திரளான மக்கள் திரட்சியோடும், நேர்த்தியான ஒழுங்கமைப்போடும், மாபெரும் எழுச்சி நிகழ்வாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கனடாவிலும் அல்பர்ட் கம்பல் சதுக்கத்தில் மே 18, 2024 சனிக்கிழமை மாலை பல்லின மக்களையும் ஈர்க்கும் வண்ணம் வரலாற்றில் பதிவாகியுள்ளது! இவ்வாண்டு தாயக மக்களின் அடக்குமுறைகளைத் தகர்த்துடைத்த பேரெழுச்சியும், உலகெங்கும் புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் மாபெரும் எழுச்சியும், தமிழக மக்களின் உணர்வெழுச்சியும் எம் தமிழினத்தின் ஓயாத ஒன்றுப்பட்ட நீதி வேண்டிப் போராடும் வலிமையான செய்தியை உலகிற்கு ஓங்கி…
-

முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றத்தில் கைதான நால்வருக்கும் பிணை!
திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நால்வரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறிய குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உள்ளிட்ட மூன்று பெண்களும் ஒரு ஆணுமாக நான்கு பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை சம்பூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மூதூர் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டமையை அடுத்து மன்றின் உத்தரவுக்கமைய 27 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்கப்பட்டனர்.…
-

வடக்கு கிழக்கில் 20ஆம் திகதி வரையில் கனமழைக்கு வாய்ப்பு!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் கனமழை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். கடந்த 13ம் திகதி இலங்கைக்கு தெற்கே வங்காள விரிகுடாவில் உருவாகிய காற்றுச் சுழற்சி தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் மழை எதிர்வரும் 20ம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளது. குறிப்பாக 18,19 ம் திகதிகளில்…