Author: yalarasan canada
-

நினைவு கூறலை தடுப்பது என்பது பெயரளவிலாவது கூறப்படும் நல்லிணக்கத்தைப் பாதிக்கும்!
வடக்கு கிழக்கில் நினைவு கூறும் உரிமைகளை தடுக்கும் செயற்பாடுகள் பெயரளவிலாவது கூறப்படும் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் என்பதை சுட்டிக் காட்டியுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இலங்கையின் நீதிக்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து வித உள்ளகப் பொறிமுறைகளும் நம்பகமற்றவை என்பதனை தொடர்ந்தும் நிரூபிக்கின்றன என தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினால் பாதிக்கப்பட்டு, இனப்படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பொதுமக்களை நினைவேந்தி, தமது உறவுகளை அஞ்சலிக்கும் நிகழ்வாக முன்னெடுக்கப்படும் “முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை” நினைவேந்தல்கள்…
-

தமிழினப்படுகொலை சாட்சிய முற்றம்!
தமிழினப் படுகொலையின் வரலாறுகளை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் நோக்கில் இனப்படுகொலைகளை திகதி வாரியாக தொகுத்து யாழ்ப்பாணத்தில் ஆவணகாட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. நல்லூரடியில் உள்ள தியாகதீபத்தின் நினைவிடத்தின் முன்னால் ”தமிழினப்படுகொலை சாட்சிய முற்றம்” என்ற பெயரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நாம் அனுபவித்தவற்றை ஆவணப்படுத்தல்கள் மற்றும் நினைவுகூர்வதன் ஊடாக அடுத்த சந்ததியினருக்கு நாம் இழந்தவற்றையும், எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் கடத்திச் செல்ல வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
-

மாவிட்டபுரத்தில் பழுதடைந்த இறைச்சி விற்ற உணவகத்திற்கு சீல்!
யாழ்ப்பாணத்தில், உணவகம் ஒன்றில் இருந்து பழுதடைந்த இறைச்சி மற்றும் கறிகள் மீட்கப்பட்டதை அடுத்து , உணவகத்திற்கு நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளது. மாவிட்டபுரம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாட்டிறைச்சி கொத்து வாங்கிய நபர் ஒருவருக்கு கொத்து ரொட்டியில் பழுதடைந்த இறைச்சி துண்டு காணப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த இறைச்சி துண்டு , மாட்டிறைச்சி போல் அல்லாது வேறு இறைச்சி போன்று காணப்பட்டதால் , அது குறித்து உணவகத்தில் இருந்தவாறே அப்பகுதி பொது…
-

யாழ். வந்த அமெரிக்க தூதுவர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்தார்!
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு நேற்றைய தினம் புதன்கிழமை விஜயம் செய்து பல சந்திப்புகளில் ஈடுபட்டார். அதன் போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் , தமிழ் சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோருடன் அமெரிக்க தூதர் ஜீலி சங் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அத்துடன் மானிப்பாயில் உள்ள அமெரிக்க மிஷனரியின் கிறீன் மெமோரியல் வைத்தியசாலைக்கு தூதுவர் விஜயம் செய்து நிலைமைகளை பார்வையிட்டார். அதேவேளை வடக்கு மாகாண கடற்படை தளபதியை காங்கேசன்துறை தலைமையகத்தில் அமெரிக்க தூதுவர் சந்தித்து…
-

யாழ். மருத்துவபீடம் முன்பாக போராட்டம்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் ஒன்றுகூடிய பல்கலைக்கழக ஊழியர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் திருநெல்வேலி சந்திவரை பேரணியாக சென்று பல்கலைக்கழகத்தை மீண்டும் அடைந்தது. நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் நடைபெற்றுவரும் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டு வருகிறது. அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனம், “பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின் சம்பள முரண்பாடு, சம்பள…
-

பொது வேட்பாளர் கோட்பாட்டின் கீழ் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைக்க முயல்கின்றோம்!
யார் பொது வேட்பாளர் என்ற கேள்வி பலர் மத்தியில் காணப்பட்டாலும் கூட தற்போது அதுபற்றி யாரும் பேசவில்லை. தற்போது பொது வேட்பாளர் என்ற கோட்பாட்டை அனைவரிடமும் கட்டி எழுப்பி அனைத்து தரப்பையும் ஒன்று சேர்த்து அதன் பின்னர் யார் பொது வேட்பாளர் என்பதை முடிவு எடுக்க தீர்மானித்துள்ளோம் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் தெரிவித்தார். நெடுந்தீவு குமுதினி படுகொலை நினைவேந்தலுக்கு பின்னர், நேற்றைய தினம் புதன்கிழமை…
-

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இம்மாதம் இறுதி வாரத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிய வருகிறது. கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகை தரும் ஜனாதிபதி கிளிநொச்சி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வைத்தியசாலை கட்டிடம் ஒன்றை திறந்து வைத்த பின்னர் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையிலும் புதிதாக அமைக்கப்பட்ட கட்டடம் ஒன்றை ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார். அத்துடன் யாழ்ப்பாண விஜயத்தின் போது வலி வடக்கு பகுதியில் ஒட்டகப்புலத்துக்குச் செல்லும் பிரதான பாதையினையும் உத்தியோபூர்வமாக மக்களிடம்…
-

நெடுந்தீவு கடலில் வெளியிடப்பட்ட ” உப்புக் கடலை உரசிய நினைவுகள்”
குமுதினி படுகொலை நினைவு நாளில் பசுந்தீவு உருத்திரன் எழுதிய ” உப்புக் கடலை உரசிய நினைவுகள்”என்ற கவி நூல் வெளியிடப்பட்டுள்ளது. குமுதினி படுகொலையின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் , நெடுந்தீவு இறங்கு துறைக்கு அருகில் உள்ள குமுதினி படுகொலை நினைவு தூபியில் இடம்பெற்றது. நினைவேந்தல் நிகழ்வினை தொடர்ந்து, கடலில் மலர் தூபி அஞ்சலி செலுத்திய பின்னர் கவிநூல் வெளியீடு கடலில் , குமுதினி படகில் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும்…
-

குமுதினி படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல்!
குமுதினி படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நெடுந்தீவில் நடைபெற்றன. நெடுந்தீவு துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள குமுதினிப் படகு படுகொலை நினைவுத் தூபிக்கு முன்பாக நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. 1985ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து 64 பயணிகளுடன் குமுதினி படகு குறிகாட்டுவான் பகுதியை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தது. குறிகாட்டுவான் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த குமுதினி படகை கடற்படையினர் நடுக்கடலில் வழிமறித்து, குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட 36 பேரை…
-

பாலியாறு நீர்த்திட்டம் அங்குரார்ப்பணம்!
வடக்கு மாகாண மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் சிந்தனையில் நிர்மாணிக்கப்படவுள்ள பாலியாறு நீர்த்திட்டம் இன்றைய தினம் புதன்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. மன்னார் வெள்ளாங்குளம் பகுதியில் இதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். பாலியாறு நீர்த்திட்டத்திற்காக…