Author: yalarasan canada
-

யாழில். மாமன் – மருமகனுக்கு இடையில் மோதல் – தடுக்க சென்ற மச்சான் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழப்பு!
தனது தந்தைக்கும் மச்சானுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை தடுக்க சென்ற இளைஞன் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – தாவடி பகுதியை சேர்ந்த 23 வயதுடைய வரதராசா நியூட்சன் எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். கடந்த 2ஆம் திகதி இளைஞனின் தந்தைக்கும் , இளைஞனின் அக்காவின் கணவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டு , கைக்கலப்பாக மாறியுள்ளது. அதனை அவதானித்த இளைஞன் இருவருக்கும் இடையிலான மோதலை தடுக்க முற்பட்ட வேளை அக்காவின் கணவரின் கத்திகுத்துக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த இளைஞனை…
-

யாழில். தமிழ் பொலிசாரை கட்டாயப்படுத்தி பிரித் ஓத வைத்த பொலிஸ் உயர்மட்டம்!
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள கெமுனு விகாரையில் நடைபெற்ற வெசாக் வழிபாட்டிற்காக தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்களை கட்டாயப்படுத்தி அழைத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. காங்கேசன்துறை குமார கோவில் வளாகத்தில் கெமுனு விகாரை அமைக்கப்பட்டுள்ளது. உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் குமார கோவில் இருந்தவேளை, ஆலயத்திற்கு முன்பாக இராணுவத்தினரால் கெமுனு விகாரை எந்தவிதமான அனுமதிகளும் பெறப்படாது நிர்மாணிக்கப்பட்டது. தற்போது குறித்த பகுதிகள் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டு அப்பகுதி மக்கள் மீள்குடியேறி குமார கோவிலில் பூஜை…
-

யாழ்ப்பாணம் – தீவங்களுக்கு இடையிலான படகு சேவைகள் இரத்து!
வடக்கில் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதனால் , யாழ்ப்பாணம், குறிகாட்டுவான் பகுதியில் இருந்து தீவுகளுக்கு செல்லும் படகு சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. குறிகாட்டுவான் – நயினாதீவுக்கான படகு சேவைகள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டு நடைபெறுகிறது. குறிகாட்டுவான் இறங்குதுறையில் இருந்து நெடுந்தீவு , எழுவைதீவு மற்றும் அனலைதீவு ஆகிய பகுதிகளுக்கான படகு சேவைகளே இரத்து செய்யப்பட்டுள்ளன. அதேவேளை நயினாதீவுக்கான படகு சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டு, பயணிகளுக்கான பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்பட்டு பாதுகாப்பான பயண சேவைகள் இடம்பெறுகின்றன. வெள்ளிக்கிழமை ஆகையால் நயினாதீவு நாக…
-

யாழ்.மாநகர சபையின் அனுமதியின்றி இராணுவத்தினரால் ஆரியகுளத்தினுள் அலங்காரம்!
யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில், மாநகர சபையின் அனுமதியின்றியே வெசாக் அலங்காரங்களை இராணுவத்தினர் செய்துள்ளதாக மாநகர சபை ஆணையாளர் கிருஷ்னேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நாக விகாரைக்கு அருகில் உள்ள ஆரியகுளம் பகுதியில் வெசாக்கினை முன்னிட்டு , இராணுவத்தினரால் வெசாக் அலங்காரம் மற்றும் வெளிச்சக்கூடுகள் , மின் விளக்கு அலங்காரங்கள் என்பவை செய்யப்பட்டுள்ளன. இதற்கான அனுமதிகள் எவையும் மாநகர சபையிடம் பெறாமல் அடாத்தாக இராணுவத்தினர் செய்துள்ளதாக ஆணையாளர் தெரிவித்துள்ளார். அதேவேளை மாநகர சபை ஆட்சி காலத்தில் ஆரிய குளப்பகுதியில்…
-

விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கிளிநொச்சியை சேர்ந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியை சேர்ந்த தம்பிராசா ரவிசந்திரன் (வயது 35) என்பவரே உயிரிழந்துள்ளார். கனகபுரம் பகுதியில் கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை…
-

யாழ்.வந்த ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் ஜனாதிபதியின் யாழ்ப்பாண வருகைக்கு எதிராக கறுப்பு கொடி கட்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட கட்டிடமொன்றை திறந்துவைப்பதற்காக யாழ்ப்பாணம் வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான வளாகம் மற்றும் மருத்துவபீட வளாகத்தில் கறுப்பு கொடிகள் கட்டப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் சுமார் பன்னிரண்டாயிரம் பணியார்கள் தங்களுடைய சம்பள முரண்பாடு…
-

யாழில். மான்கொம்புடன் ஒருவர் கைது!
யாழ்ப்பாணத்திற்கு மான் கொம்பை கடத்தி வந்த நபர் ஒருவர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பகுதியில் இருந்து நபர் ஒருவர் யாழ்ப்பாணத்திற்கு பேருந்தில் மானின் மண்டையோட்டு பகுதியுடன் மான் கொம்பை கடத்தி வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாண நகர் பகுதியை அண்மித்த பகுதியில் பேருந்தை வழிமறித்து சோதனையிட்டனர். அதன் போது மான் கொம்பு மீட்கப்பட்டதுடன் , அதனை கிளிநொச்சி பகுதியில் இருந்து கடத்தி வந்த…
-

யாழ். மருத்துவ பீடத்திற்கான புதிய கட்டட தொகுதியை ஜனாதிபதி திறந்து வைத்தார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக யாழ் நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதி கட்டிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இந்த கட்டிடத் தொகுதியில் இரண்டு சத்திர சிகிச்சை கூடங்களும், ஒரு சத்திர சிகிச்சை கூடமும், எண்டோஸ்கோபி மற்றும் மேமோகிராம், கருவுறுதல் பராமரிப்பு, யூரோடைனமிக் சேவைகள், கேட்போர் கூடம், முதுகலை மையம், மருத்துவ பணியாளர் அறை மற்றும் கற்பித்தல் வசதிகள் உள்ளன.…
-

யாழில்.வாள் வெட்டில் இளைஞன் படுகாயம் – பொலிஸ் உத்தியோகஸ்தருக்கும் தொடர்பு ?
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் ஒன்றில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் தொடர்பு பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தொல்புரம் பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் , வாள் வெட்டு சம்பவத்தில், பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரும் தொடர்பு பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
-

கொழும்பில் இருந்து யாழுக்கு பொதியில் அனுப்பப்பட்ட ஹெரோயின் – பெண் உள்ளிட்ட மூவர் கைது
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட பொதி ஒன்றினுள் போதைப்பொருளை மிக சூட்சுமமாக அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவருக்கு தனியார் நிறுவனம் ஒன்றின் பொதிகள் சேவைகள் ஊடாக, சேலை உள்ளிட்ட உடுப்புடவைகள் அடங்கிய பொதி ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த பொதியினுள் சூட்சுமமான முறையில் ஹெரோயின் போதைப்பொருளையும் மறைத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு…