Author: yalarasan canada

  • ஜனாதிபதியின் நிகழ்வை தேர்தல் பரப்புரை நிகழ்வாக நடத்த முயற்சி!

    ஜனாதிபதியின் நிகழ்வை தேர்தல் பரப்புரை நிகழ்வாக நடத்த முயற்சி!

    ஜனாதிபதியின் வடக்குக்கான விஜயத்தினை சிலர் தேர்தல் பரப்புரை நிகழ்வாக மாற்ற முனைந்தார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.   யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி வடமாகாணத்திற்கு விஜயம் செய்து கலந்து கொண்ட சில நிகழ்வுகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கலந்து கொண்டிருந்தனர். அந்நிகழ்வுகள் அரச நிகழ்வுகள் ஆகும். அதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளலாம். வடமாகாணத்தில்…

  • கனடா செல்ல தயாராக இருந்த இளைஞன் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். – யாழில் சோகம்!

    கனடா செல்ல தயாராக இருந்த இளைஞன் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். – யாழில் சோகம்!

    கனடா நாட்டிற்கு செல்வதற்கு தயாராக இருந்த இளைஞன் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் மட்டுவில் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   யாழ்ப்பாணம் சாவகச்சேரி – புத்தூர் வீதியில், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து , மதிலுடன் மோதி விபத்துக்கு உள்ளானதில் , மோட்டார் சைக்கிள் ஓட்டியான இளைஞன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளான். மட்டுவில் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய பி.பானுஜன் எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.…

  • துரோகி என சொல்வார்கள் என்பதற்காக உண்மையை கூற அஞ்ச மாட்டேன்!

    துரோகி என சொல்வார்கள் என்பதற்காக உண்மையை கூற அஞ்ச மாட்டேன்!

    யாராவது ஒருவர் என்னை துரோகி என்று சொல்லிவிடுவார் எனப் பயந்து உண்மையை சொல்வதற்கு நான் எப்போதுமே பயந்ததில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.  யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார் “கடந்த 2005 ஆம் ஆண்டு ரணிலின் பயணத்திற்கு வடக்கு மக்கள் தடையாக இருந்திருக்கலாம் அதை இப்போதாவது வருத்தத்துடன் நினைவு கூர்வார்கள் என நினைப்பதாக ஐனாதிபதி ரணில் முன்னிலையில் கூறியது தொடர்பில்,  ஊடகவியலாளர்…

  • யாழில். தமிழ் பொலிசாரை கட்டாயப்படுத்தி பிரித் ஓத வைத்த பொலிஸ் உயர்மட்டம்!

    யாழில். தமிழ் பொலிசாரை கட்டாயப்படுத்தி பிரித் ஓத வைத்த பொலிஸ் உயர்மட்டம்!

    யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள கெமுனு விகாரையில்  நடைபெற்ற வெசாக் வழிபாட்டிற்காக தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்களை கட்டாயப்படுத்தி அழைத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.   காங்கேசன்துறை குமார கோவில் வளாகத்தில் கெமுனு விகாரை அமைக்கப்பட்டுள்ளது. உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் குமார கோவில் இருந்தவேளை, ஆலயத்திற்கு முன்பாக இராணுவத்தினரால் கெமுனு விகாரை எந்தவிதமான அனுமதிகளும் பெறப்படாது நிர்மாணிக்கப்பட்டது. தற்போது குறித்த பகுதிகள் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டு அப்பகுதி மக்கள் மீள்குடியேறி குமார கோவிலில் பூஜை…

  • யாழ்.போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் முரண்பட்ட மூவர் கைது

    யாழ்.போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் முரண்பட்ட மூவர் கைது

    யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டு , பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் முரண்பட்ட குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.   யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவரை பார்வையாளர் நேரம் அல்லாத நேரத்தில் மூவரும் பார்வையிட செல்ல முற்பட்ட வேளை , பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் அனுமதிக்கவில்லை. அதனால் மூவரும் உத்தியோகஸ்தர்களுடன் முரண்பட்டு , வைத்தியசாலைக்கு அத்துமீறி நுழைய முற்பட்டுள்ளனர். அது தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தினரால்,யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து ,…

  • பொது வேட்பாளரை நிறுத்த கூடிய ஒற்றுமை தமிழர்களிடம் இல்லை!

    பொது வேட்பாளரை நிறுத்த கூடிய ஒற்றுமை தமிழர்களிடம் இல்லை!

    பொது வேட்பாளரை நிறுத்த கூடிய ஒற்றுமை தமிழ் மக்கள் மத்தியில் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்னிடம் தெரிவித்ததாக , நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.   யாழ்ப்பாணத்தில் உள்ள விக்னேஸ்வரனின் இல்லத்திற்கு நேற்றைய தினம் சனிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். குறித்த சந்திப்பு தொடர்பில் விக்னேஸ்வரன் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஜனாதிபதியின் நிகழ்வுகளுக்கு என்னால் செல்ல முடியவில்லை. அதனால் அவர் என்னை வீடு தேடி வந்து…

  • தமிழர்களின் வாக்குகளை பெறவே வடக்குக்கு ஜனாதிபதி வந்துள்ளார்!

    தமிழர்களின் வாக்குகளை பெறவே வடக்குக்கு ஜனாதிபதி வந்துள்ளார்!

    தமிழ் மக்களின் வாக்குகளை பெறும் நோக்கிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.   ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான நிர்வாக தெரிவு, கூட்டுறவாளர் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது, யுத்தம் முடிந்த பின்னரும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் இதுவரை தீரக்கப்படாமல் உள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார். இந்நிலையில், ஜனாதிபதியின் வடக்கின் விஜயம் தமிழ் மக்களின் வாக்குகளை…

  • கல்வியில் சீர் திருத்தம் வேண்டும் – வடக்கு பட்டதாரிகளை ஒன்றிணைத்து பாரிய போராட்டத்தை முன்னெடுப்போம்!

    கல்வியில் சீர் திருத்தம் வேண்டும் – வடக்கு பட்டதாரிகளை ஒன்றிணைத்து பாரிய போராட்டத்தை முன்னெடுப்போம்!

    வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச வேலைகளை விரைந்து தர நடவடிக்கை எடுக்கப்படாவிடின், வடக்கில் உள்ள அனைத்து வேலையற்ற பட்டதாரிகளையும் ஒன்றிணைத்து பாரிய போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண பட்டதாரிகள் சங்க ஊடக பேச்சாளர் கிருஸ்ணராஜா டனிசன் தெரிவித்துள்ளார்.   யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். நாங்கள் பட்டப்படிப்பை முடித்து 3 வருடங்களுக்கு மேலாகி விட்டது. ஆனாலும் எமக்கான வேலை வாய்ப்புக்களை இன்னமும் கிடைக்கப்பெறவில்லை. இது தொடர்பில் எமது…

  • விழிப்புலனற்ற பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்குங்கள்!

    விழிப்புலனற்ற பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்குங்கள்!

    விழிப்புலனற்ற வேலையில்லாத பட்டதாரிகளுக்கு விசேட செயற்திட்டம் ஊடாக விரைவாக அரச வேலைவாய்ப்புக்களை வழங்க வேண்டும் என விழிப்புலனற்ற பட்டதாரியான விஜயகுமார் விஜயலாதன் கோரிக்கை விடுத்துள்ளார்   யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு கோரியுள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நான் எனது பட்டப்படிப்பை முடித்து சுமார் நான்கு ஆண்டு கால பகுதிக்கு மேலாக வேலை வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. படிக்கும் காலத்தில் நாம் மற்றுமொருவரின் உதவியுடன் பல தடைகளை தாண்டிய கற்று, பட்டதாரி…

  • யாழில். வாங்கிய றோலுக்குள் இரும்பு கம்பித்துண்டு!

    யாழில். வாங்கிய றோலுக்குள் இரும்பு கம்பித்துண்டு!

    யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் உள்ள வெதுப்பாக உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் கடையொன்றில் வாங்கிய றோல் ஒன்றினுள் சுமார் 4 இன்ச் அளவு நீளமுடைய கறல் ஏறிய கம்பிதுண்டு ஒன்று காணப்பட்டுள்ளது.   நபர் ஒருவர் குறித்த கடையில் 80 ரூபாய் வீதம் 10 றோல்களை கொள்வனவு செய்து , தனது உறவினர் வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு றோல்களை பரிமாறி சாப்பிட்ட வேளை றோல் ஒன்றினுள் கம்பி துண்டு காணப்பட்டுள்ளது. இது தொடர்பில் சுகாதார பரிசோதகருக்கு…