Author: Six Side Media

  • பிரித்தானியாவிற்கு செல்ல இலவச வாய்ப்பு பெறும் இந்தியர்கள்

    பிரித்தானியாவிற்கு செல்ல இலவச வாய்ப்பு பெறும் இந்தியர்கள்

    இந்தியர்கள் பிரித்தானியா செல்வதற்கான இலவச விசா வாய்ப்பு ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்தோடு, இதற்கான விண்ணப்பப்படிவத்தை இன்று(22) மதியம் 1.30 முதல் நாளை மறுதினம் (24) வரை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த விசாவிற்கு விண்ணப்பிப்பவர்கள் 18- 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அத்தோடு,குறித்த நபர்களின் வங்கிக் கணக்கில் இரண்டு இலட்சம் ரூபாய் பணம் வைப்பிலிடப்பட்டு இருக்க வேண்டும். மேலும், ஏதாவது ஒரு கற்கை நெறியில் பட்டம் பெற்று இருக்க வேண்டும் எனவும்…

  • தென்கொரியாவில் கனமழையினால்  17பேர் பலி

    தென்கொரியாவில் கனமழையினால் 17பேர் பலி

    தென்கொரியாவில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரையில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்கொரியாவில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் அந்நாட்டில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தெற்கு சுங்க்சோங் மாகாணம், குவாங்ஜூ நகரம் வெள்ளம், நிலச்சரிவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கேப்யோங் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் மற்றும் நிவாரண முகாம்கள் மூழ்கி, கனமழையின் மத்தியில் வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் 2 பேர்…

  • ஐரோப்பாவில் விமானியானார் ஈழத்தை சேர்ந்த இளைஞர்

    ஐரோப்பாவில் விமானியானார் ஈழத்தை சேர்ந்த இளைஞர்

    மன்னார் – விடத்தல்தீவு கிராமத்தை சேர்ந்த அனுஜன் என்ற இளைஞர் ஐரோப்பாவில் விமானி உரிமத்தை பெற்றுள்ளார். விடத்தல்தீவில் வசிக்கும் அருள்வாசகம் பத்திமலர் ஆகியோரின் பேரனும் மொறின் பெல்சியா மற்றும் அன்ரன் ஜெறாட் ஆகியோரின் மகனும் இவர் ஆவார். 9.3.1998ஆம் திகதி பிறந்த அனுஜன், தமது ஆரம்ப கல்வியை மன்னார் லூயிஸ் முன்பள்ளியிலும் தொடர்ந்து தரம் 1 தொடக்கம் 3 வரை புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியிலும் கற்றிருந்தார்.  கிராமத்தை சேர்ந்த அனுஜன் என்ற இளைஞர் ஐரோப்பாவில் விமானி…

  • திருகோணமலை மக்களின் காணி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு..!

    திருகோணமலை மக்களின் காணி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு..!

    திருகோணமலை மாவட்டத்தில், மக்களின் குடியிருப்பு காணிகளை உரியவாறு அடையாளம் கண்டு, அவைகளை விடுவிப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில், புதிய அரசாங்கம் அக்கறையுடன் செயல்படும் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர உறுதியளித்துள்ளார். 2024ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த, கிழக்கு மாகாண துறைமுக ஊழியர்களின் பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில் மானியம் மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்வு நேற்று (19) சீனக்குடா துறைமுக அதிகார சபை மண்டபத்தில் நடைபெற்றது.…

  • ட்ரம்பிற்கு ஏற்பட்டுள்ள நோய்.. வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்!

    ட்ரம்பிற்கு ஏற்பட்டுள்ள நோய்.. வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்!

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் காலில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அவர் வாஸ்குலர் பரிசோதனைக்கு (vascular test) உட்படுத்தப்பட்டதாக வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், பரிசோதனைகளுக்கு பின்னர் ட்ரம்புக்கு பொதுவான நரம்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களிடம் கூறுகையில், ட்ரம்ப் காலில் ஏற்பட்ட வீக்கத்தை ஆராய சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதன்படி, மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னர் அவருக்கு நாள்பட்ட சிரை பற்றாக்குறை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.…

  • யாழ். பல்கலைக்கழக விவசாய பீடத்தின் வறண்ட வலயம் தொடர்பான 11ஆவது சர்வதேச மாநாடு

    யாழ். பல்கலைக்கழக விவசாய பீடத்தின் வறண்ட வலயம் தொடர்பான 11ஆவது சர்வதேச மாநாடு

    யாழ். பல்கலைக்கழக விவசாய பீடத்தின் வறண்ட வலயம் தொடர்பான 11ஆவது சர்வதேச மாநாடு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மாநாடு எதிர்வரும் 16ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக விவசாய பீட கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. அது தொடர்பாக தெளிவூட்டும் ஊடக சந்திப்பு விவசாய பீட பீடாதிபதி பேராசிரியர் கந்தையா பகீரதன் தலைமையில் இன்று (14.07.2025) இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  • அதிகரிப்பை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை!

    அதிகரிப்பை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை!

    கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், இன்று (14) அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 297.13 புள்ளிகளால் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அந்தவகையில், கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் இன்று 18,838.39 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. அதன்படி, கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வானது இன்றையதினம் 9.5 பில்லியன் ரூபாயாக பதிவாகியுள்ளது.

  • பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்

    பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்

    பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 87. கன்னட மொழியில் முதன்முதலில் அறிமுகமான சரோஜா தேவி முதல் படத்திலேயே தேசிய விருதை வென்றார். தொடர்ந்து எம்ஜிஆரின் நாடோடி மன்னன் படத்தில் அறிமுகமானார், தொடர்ச்சியாக எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசனுடன் ஜோடி சேர்ந்தார். இவர் நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்டானது, எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கு ஏற்றார் போல் பொருந்தக்கூடியவர் சரோஜா தேவி. முக…

  • அரச ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்த ட்ரம்ப்

    அரச ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்த ட்ரம்ப்

    அமெரிக்க அரச ஊழியர்களில் 1,300 பேரை பணி நீக்கம் செய்ய ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதியாக, கடந்த ஜனவரி மாதம் 2 ஆம் முறையாக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றது முதல் பல்வேறு நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறையில் உள்ள 1,300 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அமெரிக்காவில் உள்நாட்டு பணிகளில் ஈடுபட்டு வந்த 1,107 பணியாளர்கள், வெளிநாட்டு பணிகளை…

  • உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்! மக்களுக்கு அறிவிக்கப்படவுள்ள புதிய தகவல்கள்

    உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்! மக்களுக்கு அறிவிக்கப்படவுள்ள புதிய தகவல்கள்

    உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் வெளிவரும் புதிய விடயங்களை தேவையான நேரத்தில் மக்களுக்கு அறிவிப்போம் என்று பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். இதில் மறைப்பதற்கு தேசிய மக்கள் சக்திக்கு எதுவும் இல்லை எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் புலனாய்வு செய்து  விசாரணை செய்ய ஒரு ஆணைக்குழுவே நியமிக்கப்பட்டிருந்தது. அந்த ஆணைக்குழுவின் விசாரணை…