Author: Six Side Media
-
செம்மணி படுகொலை குறித்த ஐ.நா அதிகாரியின் அறிக்கை ஆரோக்கியமற்றது – அப்துல்லா மஹ்ரூப்
ஐக்கிய நாடுகள் சபையினுடைய மனித உரிமைகள் ஆணையாளர் வருகையின் போது நீண்டகாலமாக புரையோடி போய்க்கிடக்கின்ற செம்மணி படுகொலை சம்பந்தமாக தமிழ் தலைமைகள் விரிவாக பேசிய போதும் அவர் நாட்டை விட்டு செல்கின்ற போது சொல்லியிருக்கின்ற அறிக்கை அவ்வளவு ஆரோக்கியமானதாக இல்லை என முன்னாள் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார். கிண்ணியாவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், “இஸ்ரேலிய கொடும்…
-
யாழில் கசிப்புடன் இளைஞர் கைது
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை பகுதியில் 19 வயதுடைய இளைஞர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞர் 25 லீட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுன்னாகம் பொலிஸார் இன்றையதினம்(29.06.2025) மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-
இலங்கையின் எல்லைக்குள் கால் வைத்தால் கைது செய்யப்படுவீர்கள்! எச்சரிக்கை விடுத்த சந்திரசேகர்
இலங்கையின் எல்லைக்குள் கால் வைத்தால் கைது செய்யப்படுவீர்கள் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலக வங்கிக் குழுவினர் மற்றும் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, சுனில் ஹந்துன் நெத்தி, சந்திரசேகரன் ஆகியோருடன் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பங்கேற்ற கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (29.06.2025) இடம்பெற்றது. இதற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் சந்திரசேகர் இலங்கையின் எல்லைக்குள் சட்டவிரோத கடற்றொழில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரித்துள்ளார். “அத்துடன், அவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக…
-
146 பயணிகளுடன் புறப்படவிருந்த விமானத்தில் தவிர்க்கப்பட்ட மற்றுமொரு பாரிய விபத்து!
சென்னையில் இருந்து தாய்லாந்து நோக்கிப் புறப்படவிருந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்ப பிரச்சினை ஏற்பட்டதால் குறித்த விமானம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து தலைநகர் பேங்கொக் நோக்கி 146 பயணிகளுடன், தாய் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் புறப்பட ஆயத்தமாகிய நிலையில் விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினையை விமானி கண்டறிந்ததால் குறித்த விமானம் இரத்து செய்யப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. தற்போது விமானத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப பிரச்சினையை சரி…
-
சிறை வாழ்க்கைக்கு எம் குடும்பம் அஞ்சவில்லை! கெஹலிய ரம்புக்வெல
என்னையும் என் குடும்பத்தையும் சிறையில் அடைக்க இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல குற்றஞ்சாட்டியுள்ளார். கெஹலிய ரம்புக்வெல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேருக்கு எதிராக இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணையம் நேற்று முன்தினம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கெஹலிய ரம்புக்வெல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் ஒரு மருமகன் மீது…
-
இந்தியாவில் இருந்து படகில் கடத்தி வரப்பட்ட பெருமளவான கஞ்சா! மூவர் கைது
இந்தியாவில் இருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்ட 250 கிலோகிராம் கேரள கஞ்சா யாழ்.காரைநகர் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கேரள கஞ்சா கடத்தி வரப்படுவதாகக் கடற்படையினருக்குக் கிடைத்த தகவலின் பெயரில் சந்தேகத்துக்கிடமான படகைக் கடற்படையினர் மறித்து சோதனையிட்டனர். இதன்போதே அந்தப் படகில் இருந்து 250 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதையடுத்துப் படகில் இருந்த மூவரையும் படகுடன் கடற்படையினர் கைது செய்துள்ளதுடன் படகையும் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் படகுடன் சந்தேகநபர்கள் மூவரும் சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்றுறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பாதுகாப்பு பிரதி அமைச்சர் வழங்கியுள்ள உறுதிமொழி
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் நிச்சயம் நீதி நிலைநாட்டப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வடகல தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விசாரணை தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரும், சட்டமா அதிபர் திணைக்களத்தினரும் கூட்டாகச் செயற்பட்டு வருகின்றனர். பிரதான சூத்திரதாரி யார் என்பது உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில்…
-
பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் அடித்துச் செல்லப்பட்டனர்!
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஸ்வாட் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் அடித்துச் செல்லப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களில் 4 பேர் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பக்துன்க்வா மாகாணத்திற்கு சுற்றுலா வந்த குழுவின் ஒரு பகுதியினர் (ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர்), ஸ்வாட் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதன்படி கனமழை காரணமாக வெள்ளம்…
-
திருகோணமலை-தோப்பூரில் காட்டு யானைகளின் அட்டகாசம்!
திருகோணமலை, தோப்பூர் -செல்வநகர் கிராமத்திற்குள் இன்று அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் பயன் தரும் தென்னை மரங்களை சேதப்படுத்தியுள்ளன. இதன்போது காய்த்து பலன்தரக் கூடிய சுமார் 10 தென்னை மரங்கள் காட்டு யானைகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளன. ஊருக்குள் வந்து காட்டு யானைகள் இவ்வாறு சேதம் விளைவித்துள்ளமையால் ஊருக்குள் இருக்கின்ற மக்களும் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை காணப்படுவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். காட்டு யானைகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தோப்பூர் -செல்வநகர்…
-
காணி பிடிப்பு வர்த்தமானி தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
காணி நிர்ணய சட்டம் பிரிவு 4இற்கு அமைவாக வடக்கில் காணிகளை சுவீகரிக்கும் 28.03.2025 திகதியிடப்பட்ட 2430/25 இலக்கமிடப்பட்ட வர்த்தமானியை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணி M. A. சுமந்திரன் தாக்கல் செய்த மனு இன்று(28) விசாரிக்கப்பட்ட பின்னர் குறித்த வர்த்தமானியை தற்காலிகமாக வலிதற்றதாக்கும் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 02 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அதற்கிடையில் குறித்த வர்த்தமானியை மீள கைவாங்குவதற்கான வர்த்தமானியை அரசாங்கம்…