ரஷ்யா மீது ஜெலன்ஸ்கி முன்வைத்துள்ள பகிரங்க குற்றச்சாட்டு

ரஷ்யா–உக்ரைன் போரில் 47 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 81-வது கூட்டத்தொடரில் நேற்று உரையாற்றிய ஜெலன்ஸ்கி, இந்தியா, நேபாளம், கானா, தஜிகிஸ்தான், ஏமன், கென்யா, ஜிம்பாப்வே, கியூபா, பெலாரஸ், சூடான் மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 47 நாடுகளின் குடிமக்கள் ரஷ்யாவின் போரில் பயன்படுத்தப்படுவதாகக் கூறினார்.

வெளிநாடுகளைச் சேர்ந்த சிலர் “ஏமாற்று முறைகள் மற்றும் தந்திரங்கள்” மூலம் ரஷ்யாவுக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர்களில் சிலர் போர்க்களத்தில் உயிரிழப்பதாகவும் ஜெலன்ஸ்கி கூறினார்.

இந்நிலையில், இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, முன்னதாக தெரிவித்த தகவலின்படி, 227 இந்தியர்கள் ரஷ்ய ஆயுதப்படையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 139 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும் 51 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.

மீதமுள்ளவர்களை விடுவித்து இந்தியாவுக்கு அழைத்து வர ரஷ்யாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இந்திய அரசு கூறியுள்ளது.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *