2026ஆம் ஆண்டுக்கான இந்திய பணக்காரர்கள் பட்டியலில் கௌதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.9.22 இலட்சம் கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்புடன் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.8.63 இலட்சம் கோடி சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்திலும், லட்சுமி நிவாஸ் மிட்டல் மற்றும் குடும்பத்தினர் ரூ.3.39 இலட்சம் கோடி சொத்து மதிப்புடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
சைரஸ் எஸ். பூனாவாலா, ரோஷினி நாடார் மல்ஹோத்ரா, குமார் மங்கலம் பிர்லா, திலீப் ஷாங்வி, அசிம் பிரேம்ஜி, அனில் அகர்வால் மற்றும் சமீர் மேத்தா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.
2025ஆம் ஆண்டு பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்திலும், கௌதம் அதானி இரண்டாம் இடத்திலும் இருந்த நிலையில், இந்த ஆண்டு அதானி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
Leave a Reply