ஜனாதிபதி பங்கேற்கும் மக்கள் பேரணித் தொடர் இன்று ஆரம்பம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்கும் மக்கள் பேரணித் தொடர் இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது.

“எமது அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் – நாட்டிற்குச் சுபிட்சம்” எனும் கருப்பொருளின் கீழ் இந்தப் பேரணிகள் நடத்தப்படவுள்ளன.

இந்த மக்கள் பேரணித் தொடரின் முதற்கட்டம் களுத்துறை மாவட்டத்தை மையமாகக் கொண்டு இன்று பிற்பகல் ஆரம்பமாகவுள்ளது.

பேருவளை மற்றும் புளத்சிங்கல ஆகிய நகரங்களில் இந்தப் பேரணிகள் நடைபெறவுள்ளதுடன், இதற்கமைய இன்று பிற்பகல் 2.00 மணிக்கு முதலாவது பேரணி புளத்சிங்கலயிலும், பிற்பகல் 3.30 மணிக்கு பேருவளைப் பேரணியும் ஆரம்பமாகவுள்ளன.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *