உலை எண்ணெய் மற்றும் நெப்தா எரிபொருள் விலைகள் குறைப்பு

உலை எண்ணெய் மற்றும் நெப்தா எரிபொருள் விலைகளைக் குறைக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ இயக்குனர் மயூர நெத்திகுமார, இன்று (04) நள்ளிரவு முதல் இது அமுலுக்கு வருவதாகத் தெரிவித்தார்.

அதன்படி, ஒரு லீற்றர் நெப்தாவின் விலை 210 ரூபாயிலிருந்து 175 ரூபாய் வரை 35 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.மேலும், ஒரு லீற்றர் உலை எண்ணெயின் விலையையும் 248 ரூபாயிலிருந்து 210 ரூபாய் வரை 38 ரூபாயினால் குறைக்க பெற்றோலியக்  கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனிடையே, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இந்த ஆண்டிற்குரியதாக 27 பில்லியன் ரூபாய் இலாபத்தை ஈட்டியுள்ளது.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *