ஹமாஸ் அமைப்பு முழுமையாக ஆயுதங்களைக் கைவிடும் வரை காசாவிலிருந்து படைகளை விலக்கிக்கொள்ளப் போவதில்லை என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
காசா முனையில் நிலவி வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த 15 அம்ச அமைதித் திட்டத்தை இஸ்ரேல் அரசு அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்கத் தரப்புடன் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும், இந்த அமைதித் திட்ட ஆவணத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொள்ளாது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நெதன்யாகு, “நான் இஸ்ரேலின் பிரதமராகப் பொறுப்பில் இருக்கும் காலம் வரை, காசா பகுதியிலோ அல்லது மேற்குக் கரையிலோ ஒருபோதும் தனிப் பாலஸ்தீன நாடு உருவாக்க விடமாட்டேன் என்று மிகத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். அமெரிக்காவின் சில கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும், இஸ்ரேலின் தேசியப் பாதுகாப்பிற்கு எதிரான அம்சங்களைத் தங்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
Leave a Reply