அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் எப்போது முடிவுக்கு வரும், உலகளாவிய பொருளாதார சிக்கல்கள் எப்போது முற்றுபெறும் என்ற எதிர்ப்பார்ப்பில் தான் ஒட்டுமொத்த உலக நாடுகளும் எதிர்நோக்கியுள்ளன. அமெரிக்காவின் ஒவ்வொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுத்துவரும் ஈரான், ஹார்முஸ் நீரிணையை மூடியது மட்டுமில்லாமல், அமைதி ஒப்பந்தத்தின் படி அமெரிக்காவின் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களுக்குப் பில்லியன் கணக்கான டாலர்களை அமெரிக்கா இழப்பீடாக வழங்க வேண்டும், ஈரான் மீதான அனைத்துப் பொருளாதாரத் தடைகளையும் முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள அமெரிக்க ராணுவப் படைகளை உடனடியாக வெளியேற்ற வேண்டும், ஈரானிய கடற்பரப்பில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் கடற்படை முற்றுகையை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற பல முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளது..
இந்தசூழலில் தொடர்ந்து ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதால் உலகளாவிய எண்ணெய் வர்த்தகம் மிகப்பெரிய அளவில் முடங்கியுள்ளது. இதனை சரிசெய்ய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரானிடம் வைக்கப்பட்ட மூலோபய கோரிக்கையான அணு ஆயுதங்களை கைவிடவேண்டும் என்ற நிபந்தனையை கைவிட முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Leave a Reply