றார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் முதல் ஐரோப்பிய நாடாக பிரான்ஸ் மாறவுள்ளது. சிறுவர்களை இணையவழி ஆபத்துகள் மற்றும் மனநலப் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பதற்காக பிரான்ஸ் நாடாளுமன்றம் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
15 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த இந்தச் சட்டம் தடை விதிக்கிறது. இந்தத் தடை இரண்டு கட்டங்களாக நடைமுறைக்கு வருகிறது :வரவிருக்கும் செப்டம்பர் மாதம் முதல், 15 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் புதிய சமூக ஊடகக் கணக்குகளைத் தொடங்க முடியாது. 2027 ஜனவரி முதல், ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் கணக்குகளையும் முடக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
டிக்டாக் , இன்ஸ்டாகிராம் , ஸ்னாப்சாட் போன்ற முன்னணி சமூக ஊடகத் தளங்களுக்கு இத்தடை பொருந்தும். சமூக ஊடக நிறுவனங்கள் தங்களது பயனர்களின் வயதை துல்லியமாக சரிபார்ப்பதை இச்சட்டம் கட்டாயமாக்குகிறது.
பிரான்ஸைத் தொடர்ந்து பிரிட்டன், டென்மார்க், நார்வே போன்ற பிற ஐரோப்பிய நாடுகளும் இத்தகைய கட்டுப்பாடுகளைக் கொண்டுவர ஆலோசித்து வருகின்றன. உலகளவில் சிறார்களுக்கு சமூக ஊடகத் தடை விதித்த முதல் நாடு ஆஸ்திரேலியா என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply