இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 78,100 ஐக் கடந்தது!

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன், நேற்று (21) வரை பதிவான மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 78,125 ஆகப் உயர்ந்துள்ளது. இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிக பாதிப்புள்ள மாவட்டங்கள்:

கம்பஹா மாவட்டம்: 16,478 நோயாளர்கள்

கொழும்பு மாவட்டம்: 15,540 நோயாளர்கள்

மாதாந்த அதிகரிப்பு: ஜனவரி மாதத்திற்குப் பிறகு ஜூலை மாதத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

ஜூலை மாதம் (இதுவரை): 22,749 பேர்

ஜூன் மாதம்: 21,535 பேர்

அதி தீவிரமாக டெங்கு பரவும் பத்தரமுல்லை, அக்குரேகொட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, பூச்சாடிகள் மற்றும் கட்டுமானப் பகுதிகளில் டெங்கு பரவும் வகையில் நீர் தேங்கியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்கு எதிராக பத்தரமுல்லை சுகாதாரப் பணிமனை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.

கண்டி மாநகரசபை பிரிவில் 105 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், மஹாவல தொடம்கஹ பகுதியில் கண்டி மாநகரசபையால் டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக முதல்வர் சந்திரசிரி விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.

மஹரகம, வத்தேகெதர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது டெங்கு கொசுக்கள் பெருகும் வகையில் வளாகங்களை பராமரித்து வந்த இரண்டு இடங்களுக்கு எதிராக இராணுவத்தின் உதவியுடன் வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.