சி.ஐ.டியில் வாக்குமூலம் வழங்கிய கருணா!

கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று (19) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006ம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு பிரசன்னமாகினார்.

கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் திகதி கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர், கொழும்பில் இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கம் கூட்டத்தில் கலந்து கொண்டு பின்னர் மட்டக்களப்பு நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போது, இனம் தெரியாத ஆயததாரிகளால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை மேற்கொண்டுவரும் நிலையில், கருணா அம்மான் இன்று கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கருணா அம்மான், தன்னிடம் உபவேந்தர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவித்தார்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *