அரை மனதுடன் நூறு அங்கத்தவர்கள் இருப்பதைவிட, முழு மனதுடன் பத்து அங்கத்தவர்கள் என்னுடன் இருந்தால் நான் கட்சியை மீள உறுதியாக கட்டியெழுப்புவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரங்களில் தெரிவித்ததைப்போல் எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்கம் கட்சியில் மாற்றங்களை மேற்கொள்ள இருக்கின்றோம். இம்மாற்றங்களினூடாகவே தொடர்ந்து செயற்பட தயார்நிலையில் இருக்கின்றோம்.
இதுவே காலத்தின் தேவைப்பாடும் ஆகும். இ.தொ.காவின் பொதுச்செயலாளர் என்ற பதவி அங்கீகாரமானது. இ.தொ.காட்சியின் ஸ்தாபனத்தை மற்றும் சின்னத்தை பாதுகாக்க வேண்டும். அதேபோல் மலையகத்தையும் பாதுகாக்க வேண்டும். எனவே தான் நாம் நன்கு சிந்தித்து தனித்துவத்தை பாதுகாக்க வேண்டும்.
7 நாட்களுக்கு பின் மீள்திறக்கப்பட்ட பசறை வீதி
7 நாட்களுக்கு பின் மீள்திறக்கப்பட்ட பசறை வீதி
பெற்ற ஆசனங்கள்
அதே நேரம் நாடாளுமன்ற ஆசனத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற பாரிய நோக்கத்துடனே நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் யானை சின்னத்தை தேர்ந்தெடுத்தோம்.
மேலும் கடந்த 2020ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் மலையகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து கட்சிகளும் தனது மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களை பெற்றுக் கொண்டது.
நாமும் இரண்டு ஆசனங்களை பெற்றுக்கொண்டோம். அது தற்போது ஒரு ஆசனம் ஆகியது. அதற்கு காரணம் எமது ஆளுமை இன்மை அல்ல. சிலரின் சூழ்ச்சி ஆகும். இதை நாம் அனைவரும் நன்கு புரிந்துக்கொள்ள வேண்டும். இதனை நினைத்து நாம் கவலைக்கொள்ள தேவையில்லை.
அத்தோடு ஆறு உறுப்பினர்களை வென்றெடுத்த மலையக கட்சி தற்போது இரண்டு உறுப்பினர்களையே தன்வசமாக்கி நாம் உண்டு நம் வேலை உண்டு என்று இருக்கின்றார்கள்.
அதேபோல் சஜித் பிரேமதாச, 60 உறுப்பினர்கள் வைத்திருந்தவர் தற்போது 35 ஆசனங்களை வென்றெடுத்து கவலை இன்றி எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்ந்து இருக்கிறார்.
இவை அனைத்தும் சரி மகிந்த ராஜபக்ச 153 ஆசனங்களை வைத்திருந்தவர் இன்று மூன்று ஆசனத்தை வைத்திருக்கிறார். இவர்களே இவ்வாறு செயற்படும் போது நாம் நடந்தவையை நினைத்து கவலைக்கொள்ளாமல் எதிர்க்காலத்தினை நோக்கிய பயணத்தை வெற்றிக்கொள்வோம். இறந்து போன யானைக்கு 53 நாட்களில் உயிர் கொடுத்து இருக்கிறோம்.
இதை நினைத்து நாம் பெருமை கொள்ள வேண்டும். இதைவிடுத்து நாம் கவலை கொள்ள தேவையில்லை. 159 ஆசனங்களை பெற்று அரசாங்கத்தை ஆளும் ஜனாதிபதி கூறி இருக்கின்றார்” என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply