அநுரவிற்கு ஆபத்தாகும் அரசியல் யாப்பு விவகாரம்

இலங்கையின் அரசியல் யாப்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாற்றங்களை ஏற்படுத்துவராயின் அது அவருக்கு வாக்களித்த அனைத்து தரப்பினரையும் திருப்தியடைய செய்யும் என கூற முடியாது.

இவ்வாறிருக்க, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை அநுர சுமத்தியிருந்தார்.

ஒரு நாட்டின் உண்மையான அபிவிருத்தி என்பது ஊழலற்ற ஆட்சிக் கட்டமைப்பை உருவாக்குவதும் ஆகும். எனினும், இலங்கையில் ஊழலுக்காக அமைச்சர்கள் கூட கைதுசெய்யப்பட்ட வரலாறு மிகக்குறைவு.

இந்நிலையில், அவர்களின் வாக்குறுதிகளுக்கமைய ஊழலற்ற அரசாங்கம் ஒன்றை உருவாக்கி நாட்டின் பொருளாதாரத்தையும் ஸ்திரப்படுத்தினால் அவர்களின் வெற்றி இனிவரும் தேர்தல்களிலும் தொடரும்.

இல்லையெனில், அவர்களின் ஆட்சியும் இனிவரும் தேர்தல்களில் மக்களால் கவிழ்க்கப்படும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது