கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பில் பெண் மர்மமான முறையில் கொலை

கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது மாடியில் உள்ள வீடொன்றில் தனிமையில் இருந்த 70 வயதுடைய பெண் ஒருவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று பிற்பகல் கிருலப்பனை, காலிங்க மாவத்தையில் உள்ள வீட்டுத் தொகுதியில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டில் இருந்து சுமார் 8 பவுண் தங்கம் திருடப்பட்டுள்ளதாக கிருலப்பனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொலை செய்யப்பட்ட பெண்
கொலை செய்யப்பட்ட பெண் தனது கணவர், மகள் மற்றும் பேத்தியுடன் வசித்து வந்துள்ளார்.

நேற்று காலை 6.30 மணியளவில் மகள் பேத்தியை பாடசாலைக்கு விட்டுவிட்டு வேலைக்குச் சென்றுள்ளார்.

நேற்று காலை கொல்லப்பட்ட பெண் மட்டும் வீட்டில் இருந்ததாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.