ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் 2 முக்கியஸ்தர்கள் விரைவில் கைது

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பில் இரண்டு முக்கியஸ்தர்கள் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய முன்னாள் பாதுகாப்பு பிரதானி ஒருவரும், அரசியல் கட்சியொன்றின் தலைவரும் கைது செய்யப்பட உள்ளதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

செனல்4 ஊடகத்திற்கு தகவல்களை வழங்கிய அசாத் மௌலானவிடம் இணைய வழியில் சாட்சியங்கள் பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சாட்சியங்களின் அடிப்படையில் நீதிமன்றில் உத்தரவு பெற்றுக்கொண்டு முக்கியஸ்தர்கள் கைது செய்யப்பட உள்ளனர்.

செனல்4 காணொளி தொடர்பில் கடந்த அரசாங்கம் விசாரணை நடத்தி அறிக்கை தயாரித்திருந்ததோடு, முன்னாள் நீதிபதி எஸ்.ஐ.இமாம் தலைமையில் இந்த ஆணைக்குழு நிறுவப்பட்டு விசாரணை நடத்தப்பட்டிருந்தது.

இந்த விசாரணைகளில் அசாத் மௌலானா சாட்சியமளித்திருக்கவில்லை.