காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது இன்று (30) காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க அலுவலகம் முன்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, காணாமல் போன தமது பிள்ளைகளின் படங்களையும், வாசகங்கள் எழுதிய பதாகைகளையும் ஏந்தியவாறு பிள்ளைகளுக்கு நீதி வேண்டி இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது