குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளரை, உயர் நீதிமன்ற வளாகத்தில் தடுத்து வைக்குமாறு உத்தரவு

இன்று மாலை நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கும் வரை குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளரை, நீதிமன்ற வளாக சிறையில் தடுத்து வைக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, இன்று (25.09.2024) காலையில், நீதிமன்றத்தை அவமதித்ததாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய மீது குற்றம் சுமத்துவதற்கான விதியை, இலங்கை உயர் நீதிமன்றம் வெளியிட்டது.

அதேவேளை, இலங்கையில் இணையம் மற்றும் வெளிநாட்டு விசா நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கும் அமைச்சரவை தீர்மானத்தை இடைநிறுத்தும் வகையில், நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது.
எனினும், முதலாவது பிரதிவாதியான இலுக்பிட்டிய, 2024 ஆகஸ்ட் 2ஆம் திகதி உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறிவிட்டார் என்பதே குற்றச்சாட்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *