இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க சற்றுமுன் பதவிப் பிரமாணம்

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க சற்றுமுன் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

பதவிப் பிரமாணம் செய்து கொண்டதையடுத்து அவர் தனது விசேட உரையை நிகழ்த்தியுள்ளார்.

இந்த நிலையில் அநுரகுமார திசாநாயக்கவின் ஆதரவாளர்கள் பலர் காலிமுகத்திடல் பகுதியில் திரண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் அநுரகுமார திசாநாயக்க இன்னும் சில நிமிடங்களில் இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார்.

இன்று (23.09.2024) காலை ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில், அவர் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.

இலங்கையின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கை கடந்த 21ஆம் திகதி காலை 7 மணி முதல் மாலை நான்கு மணி வரை இடம்பெற்றிருந்தது.

வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு
இந்த நிலையில் மாலை நான்கு மணிக்கு பின்னர் வாக்குகள் எண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து நள்ளிரவு முதல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றைய தினம் மாலை வரையிலான காலப்பகுதி எதிர்ப்பார்ப்பின் உச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.

இவ்வாறான சூழலில் நேற்று இரவு இலங்கையின் அடுத்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க என உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில் இன்றைய தினம் அவர் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.