ஜனாதிபதி தேர்தலால் வடக்கு கிழக்கு தமிழருக்கு என்ன பயன்

ஜனாதிபதி தேர்தல் ஒவ்வொன்றும் வடக்கு கிழக்கு தமிழருக்கு அவர்களின் வாக்குகளை பெறுவது தான் இலக்காக இருந்து வருகிறது

அந்த வகையில் இந்த 2024 டிசம்பர் 21 தேர்தல் நடாத்த தீர்மானங்கள் செய்யப்பட்டது

அதில் பெரும்பான்மையான மூவர் தமிழனுக்காக என்று ஒருவர் களத்தில் இறங்க இருக்கும் தேர்தல் எவ்வாறு சாத்தியமாகும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டிய நிலையில் தமிழர்கள் இருக்கின்ற போது

உலக அரங்கில் பல இடங்களில் தமிழர்கள் நாடு கடந்த எமது அரசாங்கமும் தீர்மானங்களை தெரிவிக்க வேண்டும் அதிலும் எமது தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தியுள்ள எமது சமூகம் தமிழ் அரசியல் கட்சிகள் தமிழ் பேசும் சமூகம் ஒன்றிணைந்து

பொது வேட்பாளரை ஆதரித்து அவரை வெல்ல வைப்பது எமது இனத்தின் தலையாய தார்மீக பொறுப்பு

ஒற்றுமையே பலம் என்பது போன்று எமது தமிழ் இனம் ஆரம்ப அரசியல் களத்திலும் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக போராட்ட களத்திலும் போராடி இனவாத சிங்கள ஆதிக்க அரசிடம் இருந்து தமிழருக்கு என்று ஒரு சமஷ்டி அரசியல் தீர்வையும் இதுவரை பெற்று கொள்ள முடியவில்லை என்பது புத்தி ஜீவிகள் தொட்டு பாமர மக்கள் வரை அறிந்த வரலாற்று உண்மை

வடக்கு கிழக்கில் யுத்தம் 2009 நிறைவு பெற்ற காலப்பகுதியில் தமிழ் இனப்படுகொலை கைது செய்யப்பட்டு எமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டும் அவர்களில் பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு அடித்து கொலை செய்யப்பட்டும் அதில் புதைகுழிகள் கண்கூடாக கண்டுபிடிக்க ப்பட்டும் அதற்கான சர்வதேச நீதிமன்றத்தில் அரங்கேற்றப்படாமல் இருப்பதும் ஏன்?

இருக்கின்ற சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கையில் ஆட்சி இருப்பதே தான் தமிழர் தமிழ் பேசும் இனத்தின் நிரந்தர தீர்வு இல்லாதது தான் காரணம் என்பதை கொண்டு இந்த கொடுங்கோல் ஆட்சியை மாற்ற ஒரு தமிழன் வர வேண்டும் என்பதை நினைவில் கொள் இனமே அதற்காக
ஒன்றுபட்டு வாக்குகளி தமிழா வெற்றி பெறு ஒற்றுமையே பலம் புரிந்து கொள்ளு இனமே