தமிழ்த்தேசிய வாதிகளே ஒன்று படுங்கள்! அன்பார்ந்த கனடா வாழ் தமிழ் மக்களே நடைபெறும் கனடா தமிழர் விழாவில் எதிர்வரும் (26/08/2023) பொது வாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம்- கனடா , தமது கருத்தைப் பரப்புவதற்காக ஒரு சாவடி ஒதுக்கித் தரும்படி,2 , 3 முறை மின்னஞ்சல் மூலமும், தொலைபேசி மூலமும் தொடர்பு கொண்டு கேட்டு எமக்கு சாவடி ஒதுக்கப்படவும் இல்லை ,எங்கள் வேண்டுகோளை மறுத்தும் எந்தப் பதிலும் கனடாத் தமிழர் விழா அமைப்பாளர்களால் அனுப்பப்படவில்லை. சென்ற வருடம் எமக்கு ஒரு சாவடி தரப்பட்டது , நாம் அச்சாவடியில் எமது தேசியக் கொடியை ஏற்றிஇருந்தோம் இதனைப் பார்வையிட்ட திரு டான்ரன் துரைராசா அக் கொடியை இறக்குமாறு சொன்னார், நாங்கள் ஏற்றிய தேசியக் கொடி உடன் இறக்கக் கூடாது , முடியாது என்றோம். எந்த வாக்குவாதமும் நடக்கவில்லை. இம்முறை திட்டமிட்டு மின்னஞ்சல்களுக்கும், தொலைபேசி அழைப்புக்களுக்கும் பதில் தரப்படவில்லை . தமிழ்த் தேசியத்தின்பால் 2009ம் ஆண்டு வரை பாடுபட்ட தமிழ் அமைப்புக்கள் இன்று தமிழ்த் தேசியத்தை ஆதரிக்காமல் தன்னிச்சையான முடிபுகளை எடுத்துள்ளனர் என்பதனை பொது மக்களாகிய தங்களுக்கு தெரியப்படுத்துகின்றோம். இப்படிக்கு கண்ணன் 647-808- 7766. றெஜி 416-8268661
Leave a Reply