Tag: #canadanews

  • கனடா மாகாணம் ஒன்றில் அதிகளவு மரணங்கள் பதிவாகலாம்! வெளியான எச்சரிக்கை

    கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் அதிக அளவு மரணங்கள் பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போதை மருந்து பயன்படுத்தும் பாதுகாப்பு நிலையங்கள் மூடப்படுவதன் மூலம் இவ்வாறு மரணங்கள் பதிவாகும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். போதை மருந்து பயன்படுத்துவோருக்கு உதவும் வகையில் கண்காணிக்கப்பட்ட பாதுகாப்பு நிலையங்களில் போதை மருந்து பயன்படுத்த வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு மையங்கள் மூடப்படுவதன் மூலம் மித மிஞ்சிய அளவில் போதை மருந்து உட்கொள்ளும் சாத்தியத்தினால் மரணங்கள் வெகுவாக அதிகரிக்கலாம்…

  • ஏகலைவன் சொல்வதென்ன

    மேற்காணப்படும் வாட்ஸ்ப் செய்திமூலம் வெளிக் கொண்டுவரப்பட்ட செய்தியை தற்செயலாக நான் பார்க்க நேரிட்டது. இந்தச் செய்தியின் உண்மைத் தன்மை என்னைப் பெரிதும் தாக்கத்திற்கு உள்ளாக்கியது. இதனால் கனடா வாழ் தமிழ் மக்களுக்கு ,சில உண்மை சம்பவங்களை தெரியப்படுத்துவது என் தேசியக் கடமையாகும். கனடாவில் ஆரம்பிக்கப்பட்ட எல்லாச் சங்கங்களையும் ஒருங்கிணைத்து தமிழர் சங்கங்களின் கூட்டமைப்பு தான் (Federation of Tamil sangam)கனடாவில் உலகத் தமிழர் இயக்கத்தின் மேற்பார்வையின் கீழ் இயங்கிக் கொண்டு இருந்தது. உலக ஒழுங்குக் அமைய கனடாத்…

  • தமிழ் தேசிய வாதிகளே ஒன்று படுங்கள்

    தமிழ்த்தேசிய வாதிகளே ஒன்று படுங்கள்! அன்பார்ந்த கனடா வாழ் தமிழ் மக்களே நடைபெறும் கனடா தமிழர் விழாவில் எதிர்வரும் (26/08/2023) பொது வாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம்- கனடா , தமது கருத்தைப் பரப்புவதற்காக ஒரு சாவடி ஒதுக்கித் தரும்படி,2 , 3 முறை மின்னஞ்சல் மூலமும், தொலைபேசி மூலமும் தொடர்பு கொண்டு கேட்டு எமக்கு சாவடி ஒதுக்கப்படவும் இல்லை ,எங்கள் வேண்டுகோளை மறுத்தும் எந்தப் பதிலும் கனடாத் தமிழர் விழா அமைப்பாளர்களால் அனுப்பப்படவில்லை. சென்ற வருடம் எமக்கு…

  • கனடாவில் மாடியில் இருந்து விழுந்து பெண் ஒருவரும் சிறுமியும் மரணம்; பல்வேறு கோணங்களில் விசாரணை

    கனடாவின் வடக்கு வான்கூவார் பகுதியில் மாடியிலிருந்து விழுந்து இருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். பெண் ஒருவரும் பாடசாலை செல்லும் வயதுடைய சிறுமி ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயர் அடுக்கு மாடி ஒன்றிலிருந்து இந்த இருவரும் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் அறிந்து கொண்ட பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். தீயணைப்பு படையினர் மற்றும் உயிர் காப்பு உதவியாளர்கள் காயமடைந்த நிலையிலிருந்த இருவரின் உயிரையும் மீட்க முயற்சித்த போதும் அந்த முயற்சி வெற்றி…

  • கனடாவில் மோசமான வேலையில் ஈடுபட்ட இலங்கைத் தமிழர் அதிரடி கைது!

    கனடாவில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்த இலங்கைத் தமிழர் ஒருவர் கனடா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஒன்றாரியோவில் விட்சர்ச்-ஸ்டௌஃப்வில்லே பகுதியை சேர்ந்த 31 வயதான கபிலரசு கருணாநிதி என்ற இலங்கைத் தமிழரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவில் மோசமான வேலையில் ஈடுபட்ட இலங்கைத் தமிழர் அதிரடி கைது! கனடாவில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்த இலங்கைத் தமிழர் ஒருவர் கனடா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஒன்றாரியோவில் விட்சர்ச்-ஸ்டௌஃப்வில்லே பகுதியை சேர்ந்த 31 வயதான கபிலரசு கருணாநிதி என்ற இலங்கைத் தமிழரே…

  • இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து கனடாவில் போராட்டம்!

    பங்களாதேசில் இந்துக்கள் மீதான தாக்குதலை நிறுத்த வலியுறுத்தி கனடாவில் போராட்டம் முன்னெடுக்கபப்ட்டது. இந்த போராட்டத்தில் இந்து, யூதர்,கிறிஸ்தவர், புத்த மதத்தினர் இணைந்து பங்கேற்றுள்ளனர். கடந்த வாரத்தில் பங்களாதேசில் மாணவர்கள் போராட்டத்தால் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்திருந்தார். மாணவர்கள் போராட்டத்தில் 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் தற்போது ராணுவ ஆட்சி நடக்கிறது. இந்துக்களின் வீடுகள் குறி வைத்து தாக்கப்பட்டு வரும் நிலையில், பங்களாதேசில் சிறுபான்மை மக்களாக வாழும் இந்துக்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என…

  • கனடாவில் குளிர்பானத்தில் நோய்க்கிருமிகள்: சுகாதார ஏஜன்சி தெரிவித்துள்ள சமீபத்திய தகவல்

    கனடாவில் பானம் ஒன்றில் நோய்க்கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பானத்தை அருந்திய 2 பேர் உயிரிழந்தார்கள். 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். இந்நிலையில், அந்த பானத்தை அருந்திய மூன்றாவது நபர் உயிரிழந்துள்ளதாக கனேடிய பொது சுகாதார ஏஜன்சி தெரிவித்துள்ளது. கனடாவின் ஒன்ராறியோ, கியூபெக், ஆல்பர்ட்டா மற்றும் நோவா ஸ்கொஷியா ஆகிய நான்கு மாகாணங்களில் தாவரங்களை அடிப்படையாகக் கொண்ட பானம் ஒன்றில் லிஸ்டீரியா என்னும் நோய்க்கிருமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பானம் ஒன்றில் நோய்க்கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பானத்தை…

  • கனடாவின் முக்கிய அமைச்சர் ஒருவர் ராஜினாமா

    கனடிய லிபரல் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான சீமோஸ் ஓரீகன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். ரீகன் தொழில் அமைச்சராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தாம் அடுத்த பொது தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அவர் அறிவித்துள்ளார். சமூக ஊடக பதிவு ஒன்றின் மூலம் தனது ராஜினாமா குறித்து அவர் அறிவித்துள்ளார். நீண்ட காலமாக லிபரல் கட்சியின் உறுப்பினராக ரீகன் கடமையாற்றி வருகின்றார் என தெரிவிக்கப்படுகிறது. தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் தான் அரசியலில் இருந்து விலகுவதாக…

  • விளையாட்டால் ஒன்றிணைவோம்

    விளையாட்டால் ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழர் தடகள விளையாட்டு போட்டி எதிர் வரும் ஆகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி location Birchmount Stadium 85 Birchmount Road Scarborough ON M1N3J7 எனும் முகவரியில் நடைபெற காத்திருக்கிறது இதற்கு ஊடக அனுசரணையினை ஈழமுரசு நாமும் வழங்குவதில் பெருமை அடைகிறோம்

  • வைர மோதிரம் கொள்வனவு செய்த கனடிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

    கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மெக்சிகோவில் கொள்வனவு செய்த வைர மோதிரம் போலியானது என தெரியவந்துள்ளது. இந்த மோதிரத்தை குறித்த பெண்ணும் அவரது காதலரும் 4176 டொலர்களுக்கு கொள்வனவு செய்துள்ளனர். எனினும் நாடு திரும்பியதன் பின்னர் இந்த வைர மோதிரத்தின் பெறுமதி வெறும் 50 டாலர்கள் என தெரிய வந்துள்ளது. தாம் ஏமாற்றப்பட்டது பெரும் வருத்தமளிப்பதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார். போலியான முறையில் மெக்சிகோவில் வைர மோதிரம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த…