இலங்கைக்கு அருகில் இந்து சமுத்திரத்தில் பல கோடி பெறுமதியான பெரும் புதையல்

இந்து சமுத்திர பிராந்திய கடற்படுக்கையில் இலங்கைக்கும் – மாலைத்தீவுக்கும் அருகில் பல கனிமங்கள் நிறைந்த ஒரு மலைத்தொடர் காணப்படுகின்றது என பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி ஆரூஸ் தெரிவித்தார்.

இதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் நாடு மிகப்பெரிய செல்வந்த நாடாக மாறக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.