வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் உதவியாளர்கள் இருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் இன்றையதினம் (01.08.2024) கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆற்று மணல் அகழ்வுக்கான உரிமத்தினை பெற்றுக் கொள்வதற்காக இவ்வாறு அவர்களுக்கு இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a Reply