சீனாவில் பிரபல பெண் ஒருவர் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு உயிரை மாய்த்துள்ளார்

சீனாவை சேர்ந்த பிரபல யூடியூப் இன்ப்லூயன்சர் பான் சியோட்டிங் என்ற 24 வயதான இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இவர், தான் சாப்பிடும் வகை வகையான உணவுகளை யூடியூபில் வீடியோவால் வெளியிடுவார். பலமுறை உணவு சாப்பிடும் சவால்களையும் செய்துள்ளார். இதனால் அவர் பிரபலமடைந்தார்.

இந்நிலையில், பான் சியோட்டிங் தொடர்ந்து 10 மணி நேரம் உணவு சாப்பிடும் சவாலை எதிர்க்கொண்டார்.
ஒரு வேளைக்கு 10 கிலோ உணவு சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளார் பான் சியோட்டிங்கை, அவரது பெற்றோர் மற்றும் நலம் விரும்பிகள் எச்சரித்த போதிலும் அவர் உணவு உண்ணும் சவாலை தொடர்ந்து செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஜூலை 14ம் திகதி அன்று பான் சியோட்டிக் மூச்சடைத்து திடீரென உயிரிழந்துள்ளார்.

சியோட்டிங்-ன் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது வயிறு சிதைந்துவிட்டதாகவும், செரிக்கப்படாத உணவுகள் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சியோடிங்கின் இந்த மரணம் சமூக ஊடகங்களில் கவலையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *