நாடாளுமன்ற அமர்வானது பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தலைமையில் இன்று (23) முதல் 26 ஆம் திகதி வரை கூடவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, சிவில் நடைமுறைச் சட்டத் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மற்றும் நீதித்துறை அமைப்பு சட்டத்தின் கீழான இரண்டு உத்தரவுகள் மீதான விவாதம் இன்று (23.07.2024) இடம்பெறவுள்ளது.
மேலும், சபை ஒத்தி வைக்கப்படும் வேளையில் எதிர்க்கட்சிகள் மேற்கொண்டுள்ள தீர்மானங்கள் குறித்து விவாதம் நடத்தப்படவுள்ளது.
அதேவேளை, ‘தேசிய பாதுகாப்பு, அனைத்து மதங்கள் மற்றும் நாட்டின் கலாசாரம் ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் மற்றும் உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்’ என்ற தலைப்பில் சபை ஒத்திவைப்பு விவாதம் நாளைய தினம் (24) இடம்பெறவுள்ளது.
அது மாத்திரமன்றி, பொது நிதி முகாமைத்துவம் மற்றும் பொருளாதார மாற்றம் தொடர்பான சட்டமூலங்களின் இரண்டாம் வாசிப்பு குறித்து நாளை மறுநாள் (25) விவாதிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில், இது தொடர்பான விவாதத்திற்கு கூடுதல் அவகாசம் அளிக்கும் வகையில், அன்றைய தினம் வாய்மொழி பதில் தேவைப்படும் கேள்விகளை ஒத்திவைப்பு நேரத்தில் பரிசீலிக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
Leave a Reply