வைத்தியர் அர்ச்சுனாவின் நிகழ்ச்சிநிரல் என்ன!
யாராலும் இயக்கப்படுகின்றாரா?
தமிழ் மக்களினுடைய உரிமைகளை கபளீகரம் செய்து அவர்களை ஒடுக்கும் நகர்வுகளுக்கு மத்தியில் அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற செயற்பாடுகளின் விளைவு எவ்வாறு எதிரொலிக்கும் என்பதற்கு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விவகாரம் முன்மாதிரி
தமது நீண்டநாள் கோரிக்கைகள் நிவர்த்தி செய்யப்படாமைக்கு குரல்கொடுக்க எழுந்த மக்கள் படையின் உரத்த குரல் சாவகச்சேரி போராட்டதின் மூலம் சர்வதேசத்தின் கவனத்தை திருப்பி இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே
இதற்கு ஒரு அடித்தளமிட்ட நபராக சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா கடந்த சில தினங்களுக்கு முன்னர் எடுத்துக்காட்டாக அமைந்திருந்தார்.
ஆனால் தற்போது அர்ச்சுனாவின் குரல் எதிரொலிக்கின்றபோதும் போராட்டத்திற்கு ஆதரவளித்த மக்களின் குரல் அமைதியாகியுள்ளது ஏன்? அதனை அவதானிக்கமுடிகிறது.
இவ்வாறான ஒரு பின்னணியில் வைத்தியர் அர்ச்சுனா யாரால் இயக்கப்படுகின்றார்?
அவ்வாறு இயக்கப்படுகின்றார் என்றால் அர்ச்சுனாவின் நிகழ்ச்சிநிரல் என்ன? அர்சுனா அரசியலுக்கு வர எத்தனிக்கின்றாரா? அல்லது அவரது மனைவி பெரும்பான்மை இனத்தவர் என்றதால் இவரை தமிழ் வடக்கு மக்களின் வாக்குகளை பிரிக்க திட்டமா? தான் ஒரு வைத்தியர் தான் குற்றமற்றவர் என சுட்டிக்காட்டி நீதிமன்றில். நீதியை பெற்றிருக்கலாம் அல்லவா?
இன்றைய ஈழமுரசின் பார்வை
Leave a Reply