யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையில் தோன்றியுள்ள பெரும் குழப்பநிலைக்கு மத்தியில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் வாக்குமூலமொன்றை ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார்.
வைத்தியசாலை நடவடிக்கையில் இருந்து இடை விலகிய வைத்தியர்கள் சிலர் யாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரனின் நடவடிக்கைகளுக்கு பயந்து செயற்படுவதாகவும் கூறியுள்ளார்.
வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ள ஊழல் நடவடிக்கைகள் தொடர்பில் பல்வேறு ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அதனை மனிதஉரிமை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கவும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகரான வைத்தியர் அர்ச்சுனா கருத்து தெரிவிக்கையில்,
யாழ். சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக தற்போது பதற்றநிலை ஒன்று தோன்றியுள்ளது.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் அர்ச்சுனா சுகாதார அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு எதிராக சில தரப்பினரால் அழுத்தங்கள் வழங்கப்படுவதாக அவர் சமூக ஊடக காணொளி ஒன்றின் மூலம் விளக்கியிருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பில் பிரதேச மக்கள் வைத்தியசாலை பணிப்பாளரை சந்திக்க சென்றுள்ள நிலையில் அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வைத்திய அத்தியாசகரை பார்ப்பதற்கு பொலிஸார் மறுப்பு தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதன்போது வைத்தியசாலைக்கு வருகைதந்த நபரொருவர் கருத்து தெரிவிக்கையில்,
Leave a Reply