Tag: #Cavakachcheri#eelamurasunews#jaffna

  • சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள் நுழைந்த பொலிஸார்: பதற்ற நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்

    சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரான அர்ச்சுனாவை பலாத்காரமாக கைது செய்வதற்கு பொலிஸார் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர், சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள் சென்றிருப்பதாக குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், வைத்தியசாலையின் பிரதான மின் கட்டமைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், வைத்தியசாலையில் இருந்த ஊடகவியலாளர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளதுடன் எந்நேரமும் பதற்றநிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகின்றது.

  • சாவகச்சேரி வைத்தியருக்கு கடும் தொனியில் பதில் வழங்கிய சட்டவைத்திய அதிகாரி

    சாவகச்சேரி வைத்தியசாலையின் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பில் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், சட்டவைத்திய அதிகாரி வைத்தியர் பிரணவனுக்கும், வைத்தியர் அர்ச்சுனாவிற்கும் இடையிலான தொலைபேசி உரையாடலானது பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. சாவகச்சேரி வைத்தியசாலையில் பதில் வைத்திய அத்தியாசகராக நியமிக்கப்பட்டுள்ள வைத்தியர் அர்ச்சுனாவின் கேள்விகளுக்கு கடும் தொனியில் பதில் வழங்கும் விதமாக வைத்தியர் பிரணவனின் பதில்கள் அமையப்பெற்றுள்ளன. வைத்தியசாலை நடவடிக்கை தொடர்பில் அதிகாரபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லையா? என வைத்தியர் அர்ச்சுனா உரையாடலின் போது கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதில் வழங்கும் வைத்தியர்…

  • வைத்தியரை தாக்கியவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் : வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர்

    சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் பொறுப்பு வைத்தியர் அர்ச்சுனா மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் என வடமாகாண சுகாதார பணிப்பாளர் வி.பி.எஸ்.டி பத்திரன தெரிவித்தார். யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று(06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். முறைப்பாடு பதிவு குறித்த ஊடக சந்திப்பில், சுகாதார பணிப்பாளரிடம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அத்துமீறி நுழைந்த அரச வைத்திய அதிகாரிகள் சங்க வைத்தியர்கள் சிலர்…

  • சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன் குழப்ப நிலை! வைத்தியர் அர்ச்சுனா அம்பலப்படுத்தும் உண்மைகள்

    யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையில் தோன்றியுள்ள பெரும் குழப்பநிலைக்கு மத்தியில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் வாக்குமூலமொன்றை ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார். வைத்தியசாலை நடவடிக்கையில் இருந்து இடை விலகிய வைத்தியர்கள் சிலர் யாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரனின் நடவடிக்கைகளுக்கு பயந்து செயற்படுவதாகவும் கூறியுள்ளார். வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ள ஊழல் நடவடிக்கைகள் தொடர்பில் பல்வேறு ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அதனை மனிதஉரிமை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கவும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் சாவகச்சேரி ஆதார…