Tag: #srilankannews
-

யாழில். முள்ளிவாய்க்கால் கஞ்சி வார்ப்பு – ஊர்தி பவனியும் ஆரம்பம்!
யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்றது. தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியின் முன் கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது. முன்னதாக தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. அதனை தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஈகை சுடரும் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டதுடன் , வீதியில் சென்ற மக்களுக்கும் கஞ்சி வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து , முள்ளிவாய்க்கால் நினைவு…
-

யாழில் பண மோசடியில் ஈடுபட்ட குற்றத்தில் தென்னிலங்கை கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கைது!
வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக யாழில் பண மோசடியில் ஈடுபட்ட தென்னிலங்கை அரசியல் கட்சி ஒன்றின் யாழ் மாவட்ட அமைப்பாளர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுளளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி 09 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பெற்று மோசடி செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட தரப்பினரால் யாழ்.மாவட்ட பெருநிதி குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது…
-

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது !
முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது.2009 ம் ஆண்டு தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட தமிழினப்படுகொலை வாரம் இன்று(12) முதல் மே 18 வரை வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டு வருகிறது. அந்த வகையில், முள்ளிவாய்க்காலில் கடந்த 2009 ம் ஆண்டு இறுதி யுத்த காலத்தில் இலங்கை அரசின் திட்டமிட்ட தாக்குதல்கள் பொருளாதார தடைகள் என மக்களுக்கு உணவு மருந்து என எதையுமே கிடைக்கவிடாது தடுத்து உச்சக்…
-

கனடாவில் வாடகைத் தொகை அதிகரிப்பு!
கனடாவில் வாடகைத் தொகை அதிகரிப்பு பதிவாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் வாடகைத் தொகை 9.3 வீதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இவ்வாறு அதிகரித்துள்ளது.Rentals.ca மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. கனடாவில் ஒரு படுக்கை அறையைக் கொண்ட வீடு ஒன்றின் சராசரி வாடகை 1915 டொலர்களாக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 11.6 வீதமாக வாடகைத் தொகை அதிகரித்துள்ளது. இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட வீடு ஒன்றின் சராசரி…
-

யாழில். மாணவி ஒருவர் குழந்தையை பிரசவித்த பின்னர் , குழந்தையை கைவிட்டு தலைமறைவு!
யாழ்ப்பாணத்தை சேர்ந்த பாடசாலைச் சிறுமி ஒருவர், யாழ்.போதனா வைத்தியசாலையில் குழந்தையை பிரசவித்த பின்னர் , வைத்தியசாலையில் இருந்து தப்பி சென்றுள்ளார். வடமராட்சி துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவி கர்ப்பம் தரித்த நிலையில் தனது தாயுடன் குழந்தை பிரசவத்துக்காக நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்நிலையில் மாணவி நேற்றைய தினம் இரவு குழந்தையை பிரசவித்த நிலையில், குழந்தையை வைத்தியசாலையில் விட்டுவிட்டு, குழந்தையின் தாயான பாடசாலை மாணவியும் , மாணவியின் தாயாரும் இன்றைய…
-

யாழில். வெப்பத்தால் உயிரிழப்பு அதிகரிப்பு ; நேற்றும் ஒருவர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணத்தில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக நேற்றைய தினம் வெள்ளிக்கிழமையும் ஒருவர் உயிரிழந்துள்ளார். அல்வாய் கிழக்கு ஆண்டவர் தோட்டம் பகுதியை சேர்ந்த 68 வயதுடைய வல்லிபுரம் கோபாலசிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார். முதியவர் வீட்டில் மயக்கமுற்ற நிலையில், வீட்டில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் உடற்கூற்று பரிசோதனை நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை சட்ட வைத்திய அதிகாரி மேற்கொண்ட போது , கடுமையான வெப்ப தாக்கத்தால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையிட்டார்.…
-

யாழில். வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்தில் இருவர் வாளுடன் கைது !
யாழ்ப்பாணத்தில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் இருவர் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் வீதியில் சென்று கொண்டிருந்த பெண்ணொருவரை வழிமறித்து கத்தியை காட்டி அவரது சங்கிலியை மூவர் அடங்கிய வழிப்பறி கொள்ளை கும்பல் கொள்ளையடித்து சென்று இருந்தது. சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் , பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில் , முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை…
-

தமிழினப்படுகொலையின் 15வது நினைவேந்தல் நாள் அழைப்பு!
15 முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழினப்படுகொலை உச்சந்தொட்டு இவ்வருடம் 15வது ஆண்டு. ஈழத்தமிழினத்தின் அடக்குமுறைக்கெதிரான விடுதலைப்போராட்டத்தின் ஆயுதப் போராட்டப் பரிமாணத்தை பல்வேறு சக்திகளின் துணை கொண்டு சிறீலங்கா அரசு மௌனிக்கச் செய்து இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைகின்றது. தமிழ்த்தேசியத்தின் நம்பிக்கையில் உறுதி கொண்டு தமிழர் விடுதலைப்போராட்டத்தின் வடிவங்களை மாற்றி தொடர்ந்தும் விடுதலைக்காக ஈழத்தமிழினம் பயணிக்கின்றது என்பது, விடுதலையின் மீது கொண்ட பேரவாவின் பிரதிபலிப்பு. ஈழத்தமிழினத்தின் நீதி வேண்டிய பயணமும், தொடர் போராட்ட முன்னெடுப்புகளும் நீதியின் கதவை எப்போதுமே தட்டிக்கொண்டேயிருக்கப்போகிறது.…
-

முன்னாள் இராணுவ அதிகாரிகள் இருவர் கைது!
முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவரும் முன்னாள் இராணுவ சார்ஜன்ட் ஒருவரும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குருநாகல் பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார். ரஷ்யா மற்றும் உக்ரைனில் உள்ள கூலி இராணுவப் படை முகாம்களுக்கு முன்னாள் ராணுவ வீரர்களை கடத்திய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விசேட அறிவிப்பு!
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி தேர்தல் குறித்த வேட்பு மனுக்கள் உரிய காலப்பகுதியில் அழைக்கப்படும் என அந்த ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.