Tag: #srilankannews
-

யாழ்.பல்கலை முன்றலில் போராட்டம்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் நடைபெற்றுவரும் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடாத்த அழைப்பு விடுக்கப்பட்டமைக்கமைய, இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ் பல்கலைக்கழக நுழைவாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்வேறு விடயங்களை முன்வைத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
-

தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிர்வாகத்திற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிர்வாகத்திற்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜூன் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த பங்குனி மாதம் 16ம் திகதி இடம்பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச்சபை கூட்டம் சட்டரீதியற்றது என தெரிவித்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்தியகுழு உறுப்பினர்களான சுதாகரன் மற்றும் சூ.சூரியபிரபாவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த வழக்கானது வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த போது, குறித்த வழக்கின் எதிராளிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத…
-

சாவகச்சேரியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வார்ப்பு!
யாழ்.சாவகச்சேரியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்று வழங்கப்பட்டது.சாவகச்சேரி நகர் பகுதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அமரர் ந.ரவிராஜின் உருவச்சிலையடி வைத்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. அதென்ன போது, இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களை சுடர் ஏற்றி , மலர் தூபி அஞ்சலி செலுத்தினர். மேலும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனியும் இடம்பெற்றது.
-

தென்னிலங்கை கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளரை காணவில்லை!
தென்னிலங்கையில் உள்ள பிரதான கட்சிகளில் ஒன்றின் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளரை கடந்த ஐந்து தினங்களாக காணவில்லை என அவரது மனைவி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த திரிலோகநாதன் என்பவரே கடந்த ஐந்து நாட்களாக காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். அதேவேளை குறித்த கட்சியின் தீவக தொகுதி அமைப்பாளர் வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை ஏமாற்றி 09 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாண…
-

யாழில். போதைப்பொருளுடன் கைதான இளைஞன் பொலிஸ் காவலில் இருந்து தப்பியோட்டம்!
யாழ்ப்பாணத்தில் கஞ்சா போதைப்பொருளுடன் கைதாகிய இளைஞனை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த நிலையில் இளைஞன் தப்பியோடியுள்ளார். கஞ்சா போதைப்பொருளுடன் கைதான இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தி வந்தனர். இந்நிலையில் குறித்த இளைஞன் பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார். தப்பி சென்ற இளைஞனை மீள கைது செய்வதற்கு பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
-

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய குற்றச்சாட்டில் கைதானவர்கள் விளக்கமறியலில்!
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கைதான பல்கலைக்கழக மாணவி உள்ளிட்ட நால்வரையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. சம்பூர் பொலிசாரினால், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்ட நால்வரும் இன்றைய தினம் திங்கட்கிழமை மூதூர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதை அடுத்து , அவர்களை எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. சமூக செயற்பாட்டாளர் கமலேஸ்வரன் விஜிதா (வயது 40), பல்கலைக்கழக மாணவி கமலேஸ்வரன் தேமிலா (வயது 22),…
-
தமிழீழத் தேசியத்தலைவரின் சிந்தனையை அழிக்க முனையும் எதிரிகளின் சதிவலைப்பின்னல்களை முறியடிப்போம்.
அன்பார்ந்த தமிழீழ மக்களே! தமிழீழத்தில் சிறிலங்கா அரசு நடாத்தியதமிழின அழிப்புப் போரில், 2009 ஆம்ஆண்டு முள்ளிவாய்க்கால் வரைநிகழ்த்தப்பட்ட பேரவலத்தில் படுகொலைசெய்யப்பட்ட மக்களைநினைவேந்திடும்,தமிழின அழிப்புநினைவுநாள் – மே18 இன் பதினைந்தாம்ஆண்டு நிறைவில், வையகம் முழுவதும்பரந்துவாழும் தமிழர்கள்உணர்வெழுச்சியோடு நினைவேந்திடதயாராகும் வலிநிறைந்த காலத்தில் நாம்நின்று கொண்டிருக்கிறோம். தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் சிந்தனையில்> கட்டியெழுப்பப்பட்ட தமிழீழவிடுதலைக்கான மாபெரும்விடுதலைப்போராட்டமாக எமதுபோராட்டம் விளங்குகின்றது. பல்லாயிரக்கணக்கான மாவீரர்களையும்பல இலட்சக்கணக்கான மக்களையும்ஆகுதியாக்கி வளர்த்தெடுத்த, தியாகநெருப்பு இன்னும் சுடர்விட்டுக் கனன்றுதேசவிடுதலையை நோக்கிநகர்ந்துகொண்டிருக்கிறது. சிங்களப் பேரினவாத அரசிற்குப்பொருளாதார, இராணுவ, தொழில்நுட்பஉதவிகளை வழங்கியதன்காரணமாக, 2009…
-

யாழில் 30 இலட்ச ரூபாய் பெறுமதியான பாலை மரக்குற்றிகள் மீட்பு – சந்தேகநபர்கள் தப்பியோட்டம்!
யாழ்ப்பாணத்தில் சுமார் 30 இலட்ச ரூபாய் பெறுமதியான மரக்குற்றிகளை கடத்தி சென்றவர்களை பொலிஸார் மடக்கி பிடிக்க முற்பட்ட நிலையில் தப்பி சென்றுள்ளனர். சந்தேக நபர்கள் தப்பி சென்றுள்ள நிலையில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் வாகனமும் மரக்குற்றிகளையும் பொலிஸார் மீட்டு சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர். சாவகச்சேரி பொலிஸார் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கனகம்புளியடி சந்திக்கு அருகில் வீதி கடமையில் இருந்த வேளை , சந்தேகத்திற்கு இடமான முறையில் வீதியில் பயணித்த டிப்பர் வாகனம் ஒன்றினை…
-

நாகை – காங்கேசன்துறை கப்பல் சேவை நாளை இடம்பெறாது – 17 ஆம் திகதி ஒத்திவைப்பு!
நாகை – காங்கேசன்துறை கப்பல் சேவை தவிர்க்க முடியாத சில சட்டரீதியான அனுமதிகள் தாமதமானமையால் கப்பல் சேவை எதிர்வரும் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கப்பல் சேவை நிறுவனம் அறிவித்துள்ளது. காங்கேசன் துறைக்கும் தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் இடையிலான கப்பல் சேவை நாளைய தினம் திங்கட்கிழமை ஆரம்பமாக இருந்தது. இந்நிலையில் தவிர்க்க முடியாத சில சட்டரீதியான அனுமதிகள் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதங்கள் மற்றும் கப்பலின் தாமதமான வருகையாலும் நாளைய தினம் கப்பல் சேவை இடம்பெறாது எனவும், 17 ஆம் திகதி…
-

கனடா செல்ல முயன்ற இருவர் கைது – அவர்களுக்கு உதவிய யாழ்.வாசியும் கைது!
போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர் . அதேவேளை இந்த சம்பவத்திற்கு உதவிய சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு பிரதேசத்தில் வசிக்கும் 47 வயதுடைய நபரும், வவுனியா பிரதேசத்தில் வசிக்கும் 37 வயதான இருவரும் துபாய் ஊடாக கனடா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளனர் . இவர்கள் இருவரும் போலி கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தியதால், அவர்களைக் கைது…