Tag: #rajeevmurdercase
-
வடமராட்சி சாலை கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்ட ஐவர் கைது!
வடமராட்சி கிழக்கு சுண்டிக் குளத்திற்கும் சாலைக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை இரண்டு படகுகளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது இன்று (07.05.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் நோக்கில் வெற்றிலைக்கேணி கடற்படை கடற்பரப்பில் தொடர் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
-
வாழ விடுங்கள் ரொபர்ட் பயஸ் கடிதம் !
எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இன்றி சக மனிதனைப் போல வாழ விரும்புவதாகவும் அதற்கு தாங்கள் முழு ஒத்தழைப்பினை நல்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு மறைந்த பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட ரொபர்ட் பயஸ் தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “நீண்ட சிறைவாசத்திற்கு பிறகு உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு கடந்த 12-11-2022 முதல் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்காக சிறப்பு முகாமில் ஒன்றரை வருடங்களாக தங்ககவக்கப்பட்டு உள்ளோம். எஞ்சியிருக்கும் இறுதி…
-
ராஜீவ் காந்தி கொலை விவகாரம்! 7 நாட்களுக்குள் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ள மூவர் !
இந்தியாவின் முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 7 பேரில் மூவரான முருகன்,ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோர் ஒரு வாரத்திற்குள் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. குறித்த விடயத்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று(26) தமிழக அரசு சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி ஆர். முனியப்பராஜ் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த பேரறிவாளன், சாந்தன், முருகன்,…