Tag: # mannar#eelamurasunews#eelamnews# srilankanews

  • மன்னார் சதோச மனித புதை குழி பகுதியை Scan பரிசோதனை செய்ய தீர்மானம்.

    மன்னார் சதோச மனித புதை குழி பகுதியை Scan பரிசோதனை செய்ய தீர்மானம். (08/08/2024) மன்னார் “சதோச” மனித புதை குழி தொடர்பிலான வழக்கு நேற்றய தினம் புதன் கிழமை (7)மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் கலந்துரையாடல் வடிவில் குறித்த வழக்கு விவாதிக்கப்பட்டது. இதன் போது அகழ்வுக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி ராஜபக்ஸ,பேராசிரியர் ராஜ்சோம தேவ்,காணாமல் போனோர் சங்க பிரதிநிதிகள்,OMP அலுவளக பிரதிநிதிகள் உள்ளடங்கியோர் கலந்து கொண்டனர். இதன் போது…

  • கனடாவில் காணாமல்போன மூவர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

    கனடாவில் காணாமல் போன மூன்று பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தின் ஸ்குவாமிஷ் பகுதியில் இவ்வாறு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மலையேறிகள் மூவரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. Atwell Peak மலையுச்சியில் ஏறும் நோக்கில் கடந்த மே மாதம் குறித்த பகுதிக்கு இந்த மூன்று பேரும் சென்றுள்ளனர். எனினும் சில தினங்களின் பின்னர் குறித்த நபர்குள் பற்றிய அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. பனிப்பாறைகளைக் கொண்ட குறித்த மலைத் தொடரின் உச்சியை அடையும் முயற்சியின்…

  • கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் கைது

    சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளை அணிந்திருந்த இலங்கைப் பயணி ஒருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (Kattunayakke) கைது செய்துள்ளதாக சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது, இன்று (30.06.2024) இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 47 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, கைதானவர் 995 கிராம் நிறையுடைய 24 கரட் தங்க நகைகளை அணிந்திருந்த நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள்…

  • இலங்கை இந்திய அரசின் அசமந்த போக்கு காரணமாக துன்பியல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது.

    இலங்கை இந்திய அரசின் அசமந்த போக்கு காரணமாக துன்பியல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது. வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.வி.சுப்பிரமணியம்.. இந்திய மீனவர்களின் அத்து மீறிய நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நிலையில் கலந்துரையாடல்கள் இடம் பெற்று சில இனக்கப்பாட்டிற்கு வந்தாலும் இலங்கை இந்திய அரசின் அசமந்த போக்கு காரணமாக துன்பியல் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்தார். வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயற்குழு கூட்டம் இன்றைய தினம் சனிக்கிழமை (29)…