Tag: #Election campaign#eelamurasu#srilankanews
-
பொதுத்தேர்தலுக்கான 21ஆயிரம் அஞ்சல் மூல வாக்குகள் நிராகரிப்பு
2024 பொதுத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட மொத்த விண்ணப்பங்களில் மொத்தம் 21,160 அஞ்சல் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்தநிலையில், எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக மொத்தம் 759,210 அஞ்சல் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அஞ்சல் வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை தற்போது நிறைவடைந்துள்ளது. சமர்ப்பிக்கப்பட்ட 759,210 விண்ணப்பங்களில் 738,050 ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அண்மைய ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடுகையில் 25,731 அஞ்சல் மூல வாக்குகள் இந்த தேர்தலில் அதிகரித்துள்ளதாக…
-
ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவு!
நாட்டின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. நாளை மறுநாள் காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை 13,421 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தேர்தல் பிரசாரங்கள் நேற்று (18) நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைந்ததோடு, தேர்தல் நடைபெறும் நேரம் வரையான காலப்பகுதி அமைதி காலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில் எவ்விதமான பிரச்சார…