Tag: # eelamurasunews

  • கனடாவின் முக்கிய அமைச்சர் ஒருவர் ராஜினாமா

    கனடிய லிபரல் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான சீமோஸ் ஓரீகன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். ரீகன் தொழில் அமைச்சராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தாம் அடுத்த பொது தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அவர் அறிவித்துள்ளார். சமூக ஊடக பதிவு ஒன்றின் மூலம் தனது ராஜினாமா குறித்து அவர் அறிவித்துள்ளார். நீண்ட காலமாக லிபரல் கட்சியின் உறுப்பினராக ரீகன் கடமையாற்றி வருகின்றார் என தெரிவிக்கப்படுகிறது. தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் தான் அரசியலில் இருந்து விலகுவதாக…

  • கனடாவில் நபர் ஒருவரின் மோசமான செயல்

    கனடாவின் ஹமில்டன் பகுதியில் நபர் ஒருவர் வாகனங்களை சேதப்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பொலிஸார் இது தொடர்பிலான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர். சுமார் 36 வாகனங்களை குறித்த நபர் வாள் ஒன்றின் மூலம் தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் இவ்வாறு சேதப்படுத்தப்பட்டுள்ளன. வாகனங்களை தாக்கி சேதப்படுத்தியதுடன் மக்களை தம்முடன் சண்டைக்கு வருமாறு இந்த நபர் அழைத்ததாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • தேர்தலில் போட்டியிடுவது குறித்து மைத்திரி வெளியிட்ட தகவல் – செய்தி வெளியானது

    எதிர்காலத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலிலோ, பொதுத் தேர்தலிலோ தான் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு பதவியேற்றதை தொடர்ந்து, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தான் இந்த விடயத்தை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். இலங்கையில் நடைபெறும் தேர்தல்களில் தான் வேட்பாளராக களமிறங்காவிட்டாலும் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார். இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பான…

  • புதிய பேருந்து கட்டண பட்டியல் இதோ வெளிவந்துள்ளது

    இன்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணத்தை குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய பேருந்துக் கட்டணக் கொள்கையின்படி, 12 நிபந்தனைகளைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் திகதி பேருந்துக் கட்டணத் திருத்தம் செய்யப்படுகிறது. இவ்வருட கட்டண திருத்தத்தில் பேருந்து கட்டணம் 5.07 வீதத்தால் குறைக்கப்படவுள்ளதுடன் குறைந்தபட்ச பேருந்து கட்டணமான 30 ரூபாய் கட்டணம் 28 ரூபாய் வரை இரண்டு ரூபாவால் குறைக்கப்படவுள்ளளது. இதன்படி அதிவேக வீதிகள்…