Tag: #Arrest
-
வவுனியாவில் ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவன்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
வவுனியா சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் குறித்த பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியை கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். வவுனியா, சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 2 இல் கல்வி பயிலும் மாணவன் ஒருவன் கடந்த 3 ஆம் பாடசாலை முடிந்து வீட்டிற்கு சென்ற நிலையில் மாணவனின் முகத்திலும், தலையிலும் அடிகாயங்கள் காணப்பட்டதை அடுத்து பெற்றோர் மாணவனிடம் விசாரித்ததில் அவரது ஆசிரியை தாக்கியதாக தெரிவித்துள்ளான்.…
-
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்!
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் கடந்த சில காலமாக நிலவி வரும் நிதி நெருக்கடி காரணமாக அதனை விற்பனை செய்வதற்கான விலைமனுக்களை கோர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
-
விசாரணை முடிந்து தாயகத்திற்க்குள் கால் வைத்த மூவர்!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இலங்கையை வந்தடைந்துள்ள நிலையில் அவர்களிடத்தில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் விசாரணை இடம்பெற்றது பின்னர் இரண்டு மணித்தியாலங்களின் பின்பு விசாரணை முடிவுற்றதும் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு விமானம் மூலம் இலங்கைக்கு திரும்பிய முருகன், ஜெயக்குமார் மற்றும் ரொபர்ட் பயஸ் ஆகியோர் இன்று காலை இலங்கையை வந்தடைந்திருந்தனர்.
-
கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட வர்த்தகர்களுக்கு நீதிமன்றில் விதிக்கப்பட்ட உத்தரவு !
கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அதி கூடிய விலைகளில் பொருட்களை விற்பனை செய்தமை, காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை என பல்வேறு குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட ஏழு பேருக்கு எதிராக ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நுகர்வோர் அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே பல்வேறு குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்ட ஏழு பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு கிளிநொச்சி மாவட்ட நீதவான் பி.ஆர.ஐ ஜெமில் முன்னிலையில்…
-
இளம் குடும்பஸ்தர் மீது பொலிஸார் தாக்குதல் !
மன்னாரில் (Mannar) பொலிஸ் நிலையத்திற்கு சென்ற இளம் குடும்பஸ்தர் மீது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கடுமையாக தாக்குதல் மேற்கொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவமானது இன்று (02.03.2024) காலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.மன்னார், பள்ளிமுனை கிராமத்தை சேர்ந்த 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
-
கட்டுநாயக்கவில் பயங்கர விபத்து!
ராகம பேரலந்த தேவாலயத்திற்கு அருகில் உள்ள தொடருந்து கடவையில் பாரவூர்தி ஒன்று தொடருந்துடன் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த பாரவூர்தியின் சாரதி மற்றும் உதவியாளர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து காரணமாக தொடருந்து சாரதியும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
-
வவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் உயிரிழப்பு!
வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (31.03.2024) இடம்பெற்றுள்ளது.ஜாஎல பகுதியைச் சேர்ந்த 34 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குற்றச் செயல் ஒன்று தொடர்பில் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இந்தியாவே காரணம் : மைத்திரி வாக்குமூலம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இந்தியாவே செயற்பட்டதாக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அழைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே அவர் இந்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 2019ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன சிறிலங்கா அதிபராக பதவி வகித்த போதே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.அண்மையில் கண்டிக்கு பயணம் செய்திருந்த அவர், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களில் யார் சம்பந்தப்பட்டிருந்தனர் என்பது தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக…
-
விமல் வீரவன்ச விடுதலை!
முறையற்ற கடவுச்சீட்டை பயன்படுத்தியமை தொடர்பில் தொடரப்பட்ட வழக்கில் இருந்து தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த வழக்கு இன்று (01) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் விமல் வீரவன்ச விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு செயலிழந்த கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் வீரவன்ச வெளிநாடு செல்ல முயற்சித்தமை தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
-
கைதான விமானப் பணிப்பெண் !
பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானப் பணிப்பெண் ஒருவர் கனடாவின் ரொறொன்ரோவில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான் விமானத்தில் இருந்து வந்த ஹினா சானி என்ற விமானப் பணிப்பெண்ணின் பயணப்பொதியில் பல்வேறு நபர்களின் கடவுச்சீட்டுகள் இருந்ததைக் கண்டு ரொறன்ரோவில் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு, பாகிஸ்தான் ஏர்லைன்ஸின் செய்தித் தொடர்பாளர் அவர் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார்.