Category: முக்கிய செய்தி
-

இலங்கையை வந்தடைந்த முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயகுமாரிடம் விசாரணை !
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் தற்போது இலங்கையை வந்தடைந்துள்ள நிலையில் அவர்களிடத்தில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் விசாரணை தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது. மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு விமானம் மூலம் இலங்கைக்கு திரும்பிய முருகன், ஜெயக்குமார் மற்றும் ரொபர்ட் பயஸ் ஆகியோர் இன்று காலை இலங்கையை வந்தடைந்திருந்தனர்.
-

பாடசாலையில் இலவச மதிய உணவுதிட்டம் !
பசியுடன் பாடசாலைகளுக்கு வரும் பிள்ளைகளுக்காக மதிய உணவு செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. நேற்றிலிருந்து இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில் நாம் எல்லோருமே, எல்லா பிள்ளைகளுக்கும் வாழ்வின் தொடக்கம் நன்றாக இருக்கவேண்டும் என்றுதான் விரும்புவோம், பள்ளிக்கு வரும் ஒரு பிள்ளை, எனக்கு பசிக்கிறது என்று கூறுமானால், பள்ளி என்னும் சமுதாயம் மற்றும் நாடு என்னும் முறையில், நாம் எல்லோரும் செய்யவேண்டிய வேலை இன்னமும் நிறைய இருக்கிறது என்று பொருள் என்று…
-

இலங்கையில் அதிகரிக்கும் வறுமை விகிதங்கள் : உலக வங்கி சுட்டிக்காட்டு
இலங்கை இன்னும் அதிகரித்த வறுமை நிலைகள், வருமான சமத்துவமின்மை மற்றும் தொழிலாளர் சந்தை தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்கிறது என்று உலக வங்கியின் அண்மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டின் கடுமையான பொருளாதார வீழ்ச்சியைத் தொடர்ந்து, இலங்கையின் பொருளாதாரம் 2024ஆம் ஆண்டில் 2.2வீத மிதமான வளர்ச்சியைக் காணும் என்றும் ஸ்திரத்தன்மையின் அறிகுறிகளைக் காட்டுவதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
-

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முன்னிலையில் கனடா !
2024 ஆம் ஆண்டில் மகிழ்ச்சியான G7 நாடுகளின் பட்டியலில் கனடா (Canada) இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.இந்த ஆண்டுக்கான குறித்த தரவரிசையை WHR (World Happiness Report) வெளியிட்டுள்ளது. G7 நாடுகளின் ஒட்டுமொத்த மக்களின் மகிழ்ச்சியின் அடிப்படையில், எல்லா வயதினரும் மகிழ்ச்சியாக உள்ளனர் என்ற அடிப்படையில் கணக்கிடப்பட்டதாகும். G7 நாடுகள் பட்டியலில் கனடா, பிரான்ஸ், அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி, ஜப்பான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் உள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளில், பின்லாந்து முதல் இடத்தைப் பிடிக்க…
-

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இந்தியாவே காரணம் : மைத்திரி வாக்குமூலம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இந்தியாவே செயற்பட்டதாக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அழைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே அவர் இந்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 2019ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன சிறிலங்கா அதிபராக பதவி வகித்த போதே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.அண்மையில் கண்டிக்கு பயணம் செய்திருந்த அவர், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களில் யார் சம்பந்தப்பட்டிருந்தனர் என்பது தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக…
-

எரிபொருள் விலை குறைப்பு!
இன்று நள்ளிரவு (31) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 95 ஒக்டேன் பெட்ரோல் 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 440 ரூபாவாகும். மண்ணெண்ணெய் லீட்டருக்கு 12 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 245 ரூபாவாகும்.92 ஒக்டேன் பெட்ரோல் மற்றும் ஒட்டோ டீசல் விலை மாற்றமில்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
-

சற்றுமுன்னர் மட்டக்களப்பில் கோர விபத்து!
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி 4ம் கட்டை பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சிக்கி பலர் காயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சொகுசு பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த பேருந்து அதிகாலை 3.30 மணியளவில் 4ம் கட்டை பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி அருகிலுள்ள வர்த்தக நிலையங்கள் பலவற்றை உடைத்தெறிந்துள்ளது.விபத்தில் சாரதி உட்பட்ட பலர் பலத்த காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி வைத்தியசாலைகளுக்கு…
-

இலங்கை – இந்திய நில இணைப்பு: புதுடில்லியில் நாளை பேச்சுகள் ஆரம்பம்
இலங்கை மற்றும் இந்தியாவை இணைக்கும் வகையில் பாலம் ஒன்றை அமைப்பது தொடர்பான பேச்சுகள் நீண்டகாலாக இருநாட்டு அரசாங்கங்களும் இடையில் உள்ளது. கடந்த காலங்களில் இவை வெறும் கருத்துகளாக மாத்திரம் இருந்த நிலையில், தற்போது பேச்சுவார்த்தை மட்டத்திற்கு இந்த விடயம் நகர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பிரதமர் நரேந்திர மோடியிடம் இதுகுறித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார். தனுஷ்கோடி, தலைமன்னார் இணைப்பு இந்த சந்திப்பின் பின் கருத்து வெளியிட்ட பிரதமர் மோடி,…
-

ஈஸ்டர் படுகொலை நூல் !
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கினைப்புக் குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் எழுதிய ஈஸ்டர் படுகொலை இன – மத நல்லிணக்கம் அறிதலும் புரிதலும் நூல் வெளியிட்டு விழா இடம்பெற்றுள்ளது. நூலின் முதல் பிரதிகள் ஈஸ்டர் குண்டு தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளிற்கு வழங்கி வைத்ததைத் தொடர்ந்து, சர்வமத தலைவர்களுக்கும் நூலின் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டது. கொலைக்குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் பிள்ளையானின் இந்த செயற்பாடு பலரது விமர்சனத்திற்குள்ளாகியது.
-

“ஈஸ்டர் தாக்குதலை முன்கூட்டியே அறிந்திருந்தேன்” உண்மையை போட்டுடைத்த மைத்திரி !
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தமக்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே கருத்து வெளியிட்டதாக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு தொடர்பில் பதிலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் கூறியவை, “ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக மூன்று வாரங்களுக்கு முன்னர் எனக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நான் நேற்று அந்த அறிக்கையை வெளியிட்டேன். உத்தரவு கிடைத்தால், இரகசிய சாட்சியத்தை வழங்க எதிர்பார்த்துள்ளேன்.அது வேறு…