Category: முக்கிய செய்தி
-

வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பில் முறைப்பாடு!
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கைதான எட்டுப்பேரில் 6 பேர் இன்று கொழும்பிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரி மற்றும் சிறிலங்கா காவல்துறையினரது தமிழர்களுக்கு எதிரான இனவாத ஒடுக்குமுறைகளுக்கு துணைபோவதாக அமைந்துள்ள காரணத்தினாலேயே கொழும்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து, கொழும்பிலுள்ள ஐநா அலுவலகத்தில் மனித உரிமை விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரியுடன் நேரில் சந்தித்து சிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில்…
-

மைத்திரி: ஆறு மணித்தியாலம் சி.ஐ.டியிடம் வாக்குமூலம்! யார் சூத்திரதாரி என தெரியும் என்கிறார்!
உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவில் ஆறு மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன் வெளியேறியுள்ளார். விசாரணைகள் நிறைவடைந்ததையடுத்து பிரதான நுழைவாயிலில் வெளியேறாது மற்றுமொரு வழியே வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்றது. இன்று காலை 10.30 மணியளவில் சாட்சியம் வழங்க அவர் குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகியிருந்தார்.