Category: முக்கிய செய்தி

  • மகிந்தவின் சாதனையை முறியடித்து வரலாற்றில் இடம்பிடித்தார் பிரதமர் ஹரிணி

    நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று பிரதமர் ஹரிணி அமரசூரிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சாதனையை முறியடித்துள்ளார். இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய, 655,289 என்ற அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று கொழும்பு மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார். வரலாற்றில் இடம்பிடித்த வாக்கு எண்ணிக்கை இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் ஒரு நாடாளுமன்ற வேட்பாளர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்குகளாக பிரதமர் ஹரிணி பெற்ற வாக்குகள் இடம்பிடித்துள்ளன இதற்கு…

  • முள்ளிவாய்க்கால் நினைவு தூபில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய புதிய வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன்

    முள்ளிவாய்க்கால் நினைவு தூபில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய புதிய வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நேற்றைய தினம் (14) இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்றையதினம்(15) முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார் நேற்றைய தினம் (14) இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் தாெகுதியில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பாக போட்டியிட்டு மக்களின் அமோக ஆதரவுடன் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்…

  • மன்னாரில் வாக்காளர்களுக்கு என வழங்க கொண்டுவரப்பட்ட ஒரு தொகுதி உலர் உணவு பொதிகள் பொலிஸாரால் மீட்பு-3 நபர்கள் கைது-அடம்பன் பொலிஸார் நடவடிக்கை.

    மன்னாரில் வாக்காளர்களுக்கு என வழங்க கொண்டுவரப்பட்ட ஒரு தொகுதி உலர் உணவு பொதிகள் பொலிஸாரால் மீட்பு-3 நபர்கள் கைது-அடம்பன் பொலிஸார் நடவடிக்கை. மன்னாரில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சி ஒன்றினால் வழங்குவதற்கு என கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி உலர் உணவு பொருட்கள் இன்று புதன்கிழமை(13) மாலை மன்னார்-யாழ் பிரதான வீதியில் வைத்து அடம்பன் பொலிஸாரினால் வாகனம் ஒன்றில் வைத்து மீட்கப்பட்டுள்ளதோடு மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மன்னார்-யாழ் பிரதான வீதியில்…

  • முல்லைத்தீவு மாவட்டத்தில் தேர்தலுக்கான அனைத்து ஏற்ப்பாடுகளும் பூர்த்தி மாவட்ட அரசாங்க அதிபர்

    முல்லைத்தீவு மாவட்டத்தில் தேர்தலுக்கான அனைத்து ஏற்ப்பாடுகளும் பூர்த்தி மாவட்ட அரசாங்க அதிபர் முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான அனைத்து ஏற்ப்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார் சற்று முன்னர் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார் இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் நாளையதினம் (14) இடம்பெற இருக்கும் பாராளுமன்ற தேர்தல் தாெடர்பாக முல்லைத்தீவு மாவட்ட அனைத்து தேர்தல் பணிகளும் பூர்த்தியாகியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில்…

  • யாழில் 34 வருடங்களாக மூடப்பட்டிருந்த வீதி இன்று திறந்து வைப்பு

    யாழ். வசாவிளான் மத்திய கல்லூரியூடாக அச்சுவேலி நோக்கி செல்லுகின்ற சுமார் 2 கிலோமீட்டர்கள் தூரம் கொண்ட வீதியானது நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த நிலையில் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது. குறித்த நிகழ்வு இன்று (01.11.2024) நடைபெறவுள்ளது. இராணுவ முகாமுக்கு அருகாமையில் உள்ள குறித்த வீதியானது நீண்ட காலமாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் அண்மையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடனான சந்திப்பின்போது குறித்த வீதியை நிறைந்து வைத்து, மக்களின் போக்குவரத்துக்கு வழி சமைக்குமாறு கோரிக்கையை…

  • முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அதிரடியாக கைது

    முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது செய்யப்பட்டுள்ளார். கண்டியில் வைத்து இன்று காலை அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுகேகொட, மிரிஹான பிரதேசத்தில் உள்ள அவரது மனைவி வீட்டில் இலக்கத் தகடு இல்லாத கார் ஒன்று அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த கார் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த மகிந்த ஆட்சியின் போது பல்வேறு மோசடிகள் தொடர்பில் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

  • இலங்கையில் பிரித்தானிய பிரஜையால் ஏற்பட்ட குழப்பம் – நள்ளிரவில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

    கதிர்காமம் நாகவீதியில் உள்ள பிரபல சுற்றுலான விடுதிக்கு கூகுள் மெப் உதவியுடன் பயணித்த வெளிநாட்டவரால் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது. கூகுள் மெப் உதவியுடன் குறித்த விடுதியை நோக்கி நடந்து சென்றுள்ளார். அதிகாலை 4 மணியளவில் குறித்த விடுதிக்கு அருகில் இந்த நபர் வந்துள்ளார். அங்கிருந்த வீடு ஒன்றில் பெண் ஒருவர் தனிமையில் வசித்து வந்த நிலையில் கழிப்பறைக்கு செல்வதற்காக வெளியே வந்துள்ளார். இதன் போது வீட்டிற்கு வெளியே வெள்ளை நிறத்தில் நின்ற நபரை பார்த்து பேய் என…

  • ஈரானின் மிகப் பெரிய பாதுகாப்பு ஓட்டை!! புகுந்து விளையாடிய இஸ்ரேல்!!

    Operation Days of Repentance”என்ற பெயரில் கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல் உண்மையிலேயே ஒரு வெற்றிகரமான தாக்குதலா அல்லது இஸ்ரேலின் அந்தத் தாக்குதலை ஈரான் வெற்றிகரமாக முறியடித்துவிட்டதா? ஈரான் மீதான இஸ்ரேலின் அந்த நேரடித் தாக்குதல் எப்படியான செய்தியை உலகிற்குக் கூறிநிற்கின்றது? ஈரான் இஸ்ரேல் விவகாரத்தில்- அடுத்து என்ன நடக்கப்போகின்றது?

  • மன்னாரில் கடும் மழை வெள்ள நீரில் மூழ்கியது கிராமங்கள்

    மன்னாரில் கடும் மழை வெள்ள நீரில் மூழ்கியது கிராமங்கள் மன்னார் மாவட்டத்தில் நேற்று 23 புதன் இரவு முதல் இன்று வியாழன் 24 காலை வரை பெய்த தொடர் மழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது குறிப்பாக மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சாந்திபுரம் சௌத்பார் எழுத்தூர் மூர்வீதி உள்ளடங்கலாக பல கிராமங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது மேலும் எழுத்தூர் பகுதியில் உள்ள 30 குடும்பங்களின் வீடுகளுக்குள் நீர் புகுந்ததன் காரணமாக முப்பது குடும்பங்களும்…

  • இலங்கை கடவுச்சீட்டில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம் – நல்லூர் ஆலயத்திற்கு முன்னுரிமை

    பல மாதங்களாக நீடித்த வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கும் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்து நேற்று (21) முதல் புதிய கடவுச்சீட்டுகளை வழங்க குடிவரவு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய கடவுச்சீட்டின் நிறம் மாற்றப்பட்டு நீல நிறத்தில் உள்ளது. மேலும் பழைய கடவுச்சீட்டில் 64 பக்கங்களும், புதிய கடவுச்சீட்டில் 48 பக்கங்களும் உள்ளன. முந்தைய கடவுச்சீட்டுகளில் N எண்கள் இருந்தநிலையில் புதிய கடவுச்சீட்டில் P எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் புதிய கடவுச்சீட்டின் அனைத்து பக்கங்களிலும் அழகான புகைப்படங்கள் பொறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது…