Category: பிரதான செய்தி

  • என்னிடம் ஒப்படைக்கப்பட்டது டைட்டானிக் கப்பல்!

    இன்று தனிநபர் மற்றும் கட்சி சார்பின்றி நாட்டை முதன்மைப்படுத்தி அனைவரும் பொதுவான இணக்கப்பாட்டுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். நாட்டை நேசிக்கும் அனைவரையும் ஒன்றிணைத்து கடந்த இரண்டு வருடங்களில் நாட்டிற்காக மௌனமாக பாரிய பணிகளை செய்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, இந்த புதிய அரசியல் பயணத்தை பாதுகாத்து அதனை முன்னோக்கி கொண்டு செல்ல அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். தற்போதைய அரசாங்கத்தின் வேலைத் திட்டம் மற்றும் முன்நோக்கி செல்லும் வழிகள்…

  • புதிய பேருந்து கட்டண பட்டியல் இதோ வெளிவந்துள்ளது

    இன்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணத்தை குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய பேருந்துக் கட்டணக் கொள்கையின்படி, 12 நிபந்தனைகளைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் திகதி பேருந்துக் கட்டணத் திருத்தம் செய்யப்படுகிறது. இவ்வருட கட்டண திருத்தத்தில் பேருந்து கட்டணம் 5.07 வீதத்தால் குறைக்கப்படவுள்ளதுடன் குறைந்தபட்ச பேருந்து கட்டணமான 30 ரூபாய் கட்டணம் 28 ரூபாய் வரை இரண்டு ரூபாவால் குறைக்கப்படவுள்ளளது. இதன்படி அதிவேக வீதிகள்…

  • சம்பந்தனின் இழப்பு ஒரு சகாப்தத்தின் முடிவு: சஜித் இரங்கல்

    சம்பந்தனின் இழப்பு இது ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தமது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தமது எக்ஸ் தளத்திலே இந்த பதிவை வெளியிட்டுள்ளார். மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “அரை நூற்றாண்டுக்கும் மேலாக இலங்கைக்கு சேவையாற்றிய சம்பந்தனின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கிறோம். அனைத்து இலங்கையர்களுக்கும் சம உரிமைகளை வழங்குவதற்கான அவரது அர்ப்பணிப்பு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகும். https://twitter.com/sajithpremadasa?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1807611861174722863%7Ctwgr%5Efe1e970910bb7c33f0eab8b78015ddbb0809876d%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamilwin.com%2Farticle%2Fsampanthan-loss-end-of-era-sajith-s-condolences-1719814557 என்றுள்ளது குறிப்பிடத்தக்கது

  • கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் கைது

    சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளை அணிந்திருந்த இலங்கைப் பயணி ஒருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (Kattunayakke) கைது செய்துள்ளதாக சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது, இன்று (30.06.2024) இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 47 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, கைதானவர் 995 கிராம் நிறையுடைய 24 கரட் தங்க நகைகளை அணிந்திருந்த நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள்…

  • கொக்கிளாய் வழித்தடத்தில் பேருந்து சேவை சீரில்லை ! இ.போ.ச. முல்லைத்தீவு சாலை அதிகாரிகளின் அசமந்த போக்கு _பொதுமக்கள் விசனம்

    கொக்கிளாய் வழித்தடத்தில் பேருந்து சேவை சீரில்லை ! இ.போ.ச. முல்லைத்தீவு சாலை அதிகாரிகளின் அசமந்த போக்கு _பொதுமக்கள் விசனம் Tavaseelan news reporter இலங்கை போக்குவரத்து சபையின் முல்லைத்தீவு சாலையின் ராவ் முல்லைத்தீவிலிருந்து கொக்குளாய் வழித்தடத்தில் பயணிக்கும் பேருந்து சேவை சீரான முறையில் இடம் பொறாமையினால் மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் அரச ஊழியர்கள் தனியார் நிறுவன ஊழியர்கள் என பலரும் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபையின் முல்லைத்தீவு சாலையில்…

  • வடக்கை பொருளாதாரத்தில் வலுவடைந்த மாகாணமாக மாற்றுவது ஜனாதிபதியின் இலக்காக உள்ளதென வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

    வடக்கை பொருளாதாரத்தில் வலுவடைந்த மாகாணமாக மாற்றுவது ஜனாதிபதியின் இலக்காக உள்ளதென வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இணைத் தலைவர்களான வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான குலசிங்கம் திலீபன் ஆகியோரின் தலைமையில் இன்று (27/06/2024) நடைபெற்றது. இதன்போது உரையாற்றிய கௌரவ ஆளுநர், மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டுதலுக்கு அமைய வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்தார். தொழில் அற்றோர்…

  • அரசு எங்களை சாகும் வரையான உண்ணாவிரதத்துக்கு நகர்த்துகிறது.- தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் செயலாளர் முகமது காமில்!

    அரசு எங்களை சாகும் வரையான உண்ணாவிரதத்துக்கு நகர்த்துகிறது.- தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் செயலாளர் முகமது காமில்! நியாயமான மற்றும் எங்களுக்கு வழங்குவதாக அரசால் வாக்குறுதியளிக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளை நிவர்த்திக்குமாறு கோரி நாடு முழுவதிலுமுள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கடந்த 50 நாட்களாக போராடிவரும் இன்றைய சூழலில் அரசும் சம்மந்தப்பட்ட நிருவாகிகளும் கண்ணை மூடிக்கொண்டிருப்பது எங்களை சாகும்வரையான உண்ணாவிரதத்துக்குள் தள்ள எத்தனிப்பது போன்று உள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் செயலாளர் எம்.எம். முகமது காமில் தெரிவித்தார்.…

  • கனடாவில் உச்சம் தொட்ட வீட்டு வாடகை: அவதியுறும் புலம்பெயர் தமிழர்கள்

    கனடாவில் உச்சம் தொட்ட வீட்டு வாடகை: அவதியுறும் புலம்பெயர் தமிழர்கள்

    கனடாவில் வீட்டு வாடகைத் தொகை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மே மாதத்தில் கனடாவில் சராசரி வீட்டு வாடகைத் தொகை இலங்கை ரூபாப்படி 630,000 ஐ (2,200 அமெரிக்க டொலர்கள்) தாண்டியுள்ளது. Rentals.ca மற்றும் Urbanation நிறுவனத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வீட்டு வாடகைத் தொகை 9.3 வீதமாக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வான்கூவர் மற்றும் டொராண்டோவில் 2023 ஆண்டு மே மாதம் முதல் வீட்டு வாடகைத்…

  • விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்பு: வைக்கோ கடும் கண்டனம்

    விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்பு: வைக்கோ கடும் கண்டனம்

    தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்திய மத்திய அரசு தடைசெய்துள்ள நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். தவறான நோக்கத்தோடு உண்மைக்கு மாறாக புலிகள் இயக்கம் மீதான தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், இது அநீதியான செயல் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டள்ள அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ‘இலங்கையில் நடைபெற்றுவந்த போர், 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த பிறகும், விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழீழ தனி நாட்டுக் கோரிக்கையை கைவிடவில்லை.…