Category: இலங்கை செய்திகள்
-

திருகோணமலை-தோப்பூரில் காட்டு யானைகளின் அட்டகாசம்!
திருகோணமலை, தோப்பூர் -செல்வநகர் கிராமத்திற்குள் இன்று அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் பயன் தரும் தென்னை மரங்களை சேதப்படுத்தியுள்ளன. இதன்போது காய்த்து பலன்தரக் கூடிய சுமார் 10 தென்னை மரங்கள் காட்டு யானைகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளன. ஊருக்குள் வந்து காட்டு யானைகள் இவ்வாறு சேதம் விளைவித்துள்ளமையால் ஊருக்குள் இருக்கின்ற மக்களும் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை காணப்படுவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். காட்டு யானைகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தோப்பூர் -செல்வநகர்…
-

காணி பிடிப்பு வர்த்தமானி தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
காணி நிர்ணய சட்டம் பிரிவு 4இற்கு அமைவாக வடக்கில் காணிகளை சுவீகரிக்கும் 28.03.2025 திகதியிடப்பட்ட 2430/25 இலக்கமிடப்பட்ட வர்த்தமானியை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணி M. A. சுமந்திரன் தாக்கல் செய்த மனு இன்று(28) விசாரிக்கப்பட்ட பின்னர் குறித்த வர்த்தமானியை தற்காலிகமாக வலிதற்றதாக்கும் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 02 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அதற்கிடையில் குறித்த வர்த்தமானியை மீள கைவாங்குவதற்கான வர்த்தமானியை அரசாங்கம்…
-

யாழில் திடீரென சுழற்றி அடித்த காற்று!
யாழ்ப்பாணத்தில் காலநிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு பல பிரதேசங்களில் சற்று முன்னர் பாரிய சுழல் காற்றுடன் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது திடீரென சுழற்றி அடித்த காற்றினால் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. தற்போது இடி மழையுடன் பலத்த காற்று ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது இதேவேளை பாரிய காற்றினால் மின்சாரம் பல பகுதிகளில் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மரங்கள் முறிந்து விழுந்து சேதம் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக மின்சார சபையை தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
-

யாழில் நிறுத்தப்பட்ட இசை நிகழ்ச்சி! ; சோகத்துடன் வெளியேறிய பாடகர்கள்!
யாழ்ப்பாணத்தில் இன்று திடீரென பாரிய சுழல் காற்றுடன் மழை பெய்தததால் சரிகமப இசைக்குழுவினர் கலந்துகொண்ட இசை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது. இசைநிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பிரபலமான தொலைக்காட்சி நிறுவனத்தின் சரிகமப இசைக்குழுவினர் நேற்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். ஜீ தமிழ் தொலைக்காட்சி இடம்பெற்று வரும் சரிகமப இசை நிகழ்ச்சியானது சீனியர், யூனியர் என்ற ரீதியில் தொடர்சியாக இடம்பெற்று உலகளவில் அனைவரையும் கவர்ந்து வருகின்றது. இந்த நிலையில், பிரம்மாண்ட இசைநிகழ்ச்சியொன்று யாழ்ப்பாணத்தில் ஏற்பாடுசெய்யப்பட்ட நிலையிலேயே சரிகமப இசைக்குழுவினர் பலாலி விமான…
-

வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகின்றோம்- பிரபு எம்பி
கடந்த காலங்களில் அரசாங்கம் பல வாக்குறுதிகளை வழங்கியதாகவும் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லையென்று பல விடயங்களை எதிர்க்கட்சியினர் விமர்சனங்களுக்கு உள்ளாக்கி இருந்தார்கள். இன்று நாங்கள் அந்த விமர்சனங்களையும் தாண்டி அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகின்றது என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார். கிராமிய பாதை அபிவிருத்தி திட்டம் எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் கிராம வீதிகளை அபிவிருத்தி செய்யும் செயல் திட்டமானது நேற்றைய (21)தினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து…
-

நாமலை பழிதீர்க்க காத்திருந்தேன் ; நாடாளுமன்றில் உண்மையை உடைத்த அர்ச்சுனா
ஒரு காலத்தில் தனது அப்பாவைக் கொலை செய்த நாமல் ராஜபக்சவை கொலை செய்ய நினைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்ந்தும் உரையாற்றுகையில், “எனது அப்பாவைக் கொலை செய்த நாமல் ராஜபக்சவை நான் கொலை செய்ய வேண்டும் என ஒரு காலத்தில் நினைத்துக் கொண்டிருந்தேன். இன்று போய் அழகாகக் கதைத்தேன். அந்தளவு பகை எனது இதயத்திலிருந்தது. நான் சிறுவயதாக…
-

கழிவுப் பொருட்களுக்கு தீ வை வைப்பு :வீதியால் செல்லும் மக்கள் அவதி
மானிப்பாய் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் யாழ்ப்பாணம் மாநகர சபையினர் கழிவுப் பொருட்களை சேகரித்து வருகின்றனர். குறித்த கழிவு சேகரிக்கும் பகுதிக்கு தொடர்ச்சியாக தீ வைத்து வருவதால் வீதியால் செல்லும் பயணிகளும் அண்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களும் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். அந்தவகையில் இன்றையதினம் குப்பை மேட்டுக்கு தீ வைத்ததன் மூலம் வெளியான புகை வீதியெங்தும் பரவியதால் வீதியால் செல்லும் மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். மாநகர சபையின் இவ்வாறான செயற்பாடுகள் குறித்து பல தடவைகள் செய்திகள் வெளியாகிய போதும் அவர்கள்…
-

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம், முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்க அரசாங்கம் தீர்மானம்
பாராளுமன்ற ஓய்வூதிய சட்டங்களை இரத்து செய்வதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 1986 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க ஜனாதிபதி உரித்துக்கள் சட்டம் மற்றும் 1977 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டங்களை இரத்துச் செய்வதற்கு இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கத்தால் பொதுமக்களுக்கு முன்வைக்கப்பட்டுள்ள ‘வளமான நாடு – அழகான வாழ்வு’ கொள்கைப் பிரகடனத்தின் பிரகாரம், முன்னாள் ஜனாதிபதிமாருக்கும் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள விசேட சிறப்புரிமைளை இரத்துச் செய்வதற்காகவும்,…
-

இந்திய தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவது குறித்ததான கலந்துரையாடல்
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயனுக்கும் இலங்கை ஏதிலிகள் மறுவாழ்வு நிறுவனம் (ஒஃபர் சிலோன்) மற்றும் Acted நிறுவன உத்தியோகத்தர்களுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடலானது நேற்று (16) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கு ஏதுவான பொறிமுறையை உருவாக்கும் வகையிலான கொள்கை ஆவண வரைவு தயாரிக்கப்பட்டு அது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இந்த ஆண்டு தமிழகத்திலுள்ள 290 குடும்பங்கள் இலங்கைக்கு மீள்வர விருப்பம் தெரிவிக்கப்பட்டு அதற்கான ஏது நிலைகள்…
-

இஸ்ரேலுக்கு செல்லவுள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு
இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்புவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், நிலைமையைப் பொறுத்து மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். மத்திய கிழக்குபிராந்தியத்தில் நிலவும் பதட்டமான சூழ்நிலை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் கொந்தளிப்பான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அந்தந்த நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் தேவையான நேரடி தலையீட்டை மேற்கொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார். அவர்களின் பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் அந்தந்த நாடுகளின்…