Category: இலங்கை செய்திகள்

  • முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வவுனியாவில் விபத்தில் பலி !

    முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வவுனியாவில் விபத்தில் பலி !

    முல்லைத்தீவில் இருந்து வவுனியா நோக்கிபயணித்துக்கொண்டிருந்த வைத்திய அதிகாரியின் வாகனம் ஓமந்தை பகுதியில் சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்துகொண்டிருந்த டிப்பர் வாகனத்துடன் மோதியதில் விபத்து இடம்பெற்றது. விபத்தில் வைத்தியர் பயணித்த வாகனம் கடும் சேதமடைந்ததுடன் அதனைச்செலுத்திச்சென்ற வைத்தியர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்றிரவு 07 மணியளவில் மரணமடைந்தார். சம்பவத்தில் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளரும் முன்னாள் வவுனியா வைத்தியசாலை பணிப்பாளருமான வைத்தியர் கு.அகிலேந்திரன்…

  • உயிர்த்த ஞாயிறை முன்னிட்டு தேவாலயங்களுக்கு விசேட அறிவித்தல் !

    உயிர்த்த ஞாயிறை முன்னிட்டு தேவாலயங்களுக்கு விசேட அறிவித்தல் !

    தேவாலயங்களுக்கு வரும் அடையாளம் தெரியாத நபர்கள் தொடர்பில் அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர். தவக்காலத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு கத்தோலிக்க தேவாலயங்களிலும் தற்பொழுது பல ஆராதனை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு நடைபெறும் ஆராதனைகளில் பங்கேற்க வரும் புதியவர்கள் அல்லது அடையாளம் தெரியாதவர்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமானவர்கள் தொடர்பில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு தேவாலயங்களில் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  

  • மீண்டும் தமிழ் இளைஞர்களை துரத்தும் சி.ஐ.டி !

    மீண்டும் தமிழ் இளைஞர்களை துரத்தும் சி.ஐ.டி !

    முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் அரச ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட தமிழ் இளைஞர்கள், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் குற்றவியல் விசாரணைப் பிரிவுக்கு தொடர்ச்சியாக அழைக்கப்படுவதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். வவுனியா, ஓமந்த பிரதேசத்தில் வசிக்கும் பெற்றோர், ஆறு வருடங்களுக்கு மேலாக வெளிநாட்டில் இருக்கும் தமது மகனை குற்றவியல் விசாரணைப் பிரிவுக்கு  வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளமையால் அச்சமடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளனர். கடந்த 2018ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டில் வசிக்கும் வவுனியா ஓமந்த பகுதியைச் சேர்ந்த…

  • கேப்பாப்புலவு இராணுவ முகாம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் !

    கேப்பாப்புலவு இராணுவ முகாம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் !

    முல்லைத்தீவு கேப்பாபுலவில் இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த காணிகளை விடுவிக்க கோரி இன்று கேப்பாப்புலவு இராணுவ படை தலைமையத்திற்கு முன்பாக கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ள நிலையிலே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த இராணுவ முகாமிற்கு இராணுவ தளபதி நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக வருகை தரவுள்ளதாகவும், முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ள நிலையிலே குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் தமது காணிகளை விரைவில் விடுவிக்கக்கோரி அதிபருக்கும், முல்லைத்தீவு…

  • யாழில் கனடா அனுப்புவதாக கூறி பண மோசடி !

    யாழில் கனடா அனுப்புவதாக கூறி பண மோசடி !

    யாழில் தன்னை ஊடகவியலாளராக அடையாளப்படுத்திக்கொண்டு கனடா அனுப்புவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் பொலிஸாரினால்  கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவில் தென்னிந்திய இசையமைப்பாளரின் மாபெரும் இசை நிகழ்வொன்று இடம்பெறவுள்ளதாகவும் அதற்காக இலங்கையில் இருந்து சில ஊடகவியலாளர்களை அழைத்து செல்ல உள்ளதாகவும் குறித்த நபர் தெரிவித்துள்ளார். அவ்வாறு அழைத்து செல்லப்படவுள்ள ஊடகவியலாளர்களுடன் ஊடகவியலாளராக உங்களையும் அழைத்து சென்று கனடாவில் இறக்கி விடுவதாக யாழ்ப்பாண இளைஞன் ஒருவரிடம் கூறியுள்ளார். அதற்காக சிலருக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பதோடு ஊடக…

  • முன்னாள் போராளிகள் தொடர்பில் புதிய திட்டம் போடும் கருணா !

    முன்னாள் போராளிகள் தொடர்பில் புதிய திட்டம் போடும் கருணா !

    மண்ணிற்காக உழைத்த போராளிகள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் அணிதிரட்ட கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கட்டளை ஒன்றினை வழங்கியுள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவர் ஜெயா சரவணா தெரிவித்துள்ளார். பிரத்தியேகமாக வெளியிட்டிருந்த செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “வடமாகாணத்திற்கான பொறுப்பாளராக என்னை விநாயகமூர்த்தி முரளிதரன் தற்போது நியமித்துள்ளார். ஆகையால் கட்சியினால் பாரிய நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளோம். மண்ணிற்காக உழைத்த அனைத்து முன்னாள் போராளிகளையும் ஒரு குடையின்…

  • தேங்காயின் விலையில் பாரிய மாற்றம் !

    தேங்காயின் விலையில் பாரிய மாற்றம் !

    எதிர்வரும் மாதங்களில் தேங்காய் ஒன்று 200 அல்லது 300 ரூபாவுக்கு விற்பனை செய்யும் நிலை ஏற்படக்கூடும் என்று தென்னை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்பொழுது கிளிநொச்சி சேவை சந்தையில் ஒரு தேங்காய் 120 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு மாதமும் அறுவடை செய்கின்ற தேங்காயில் ஒரு பங்கு மாத்திரமே தற்பொழுது அறுவடை செய்யப்பட்டு வருவதாகவும் இனி வரும் மாதங்களில் முற்றாக தேங்காய் இல்லாத நிலை காணப்படும் எனவும் தென்னை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு காரணம் கிளிநொச்சி…

  • யாழில் 5 வயது சிறுவன்  உயிரிழப்பு !

    யாழில் 5 வயது சிறுவன் உயிரிழப்பு !

    யாழ்ப்பாணத்தில் ஆஸ்துமாவுக்கு உரிய சிகிச்சை பெறாத சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அராலி மத்தியைச் சேர்ந்த கிருபாகரன் சுலக்சன் என்ற  5 வயதான சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். உயிரிழந்த  சிறுவன் கடந்த ஒரு வார காலமாக ஆஸ்துமா நோயால் அவதிப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்தநிலையில் அதிகாலை சிறுவன் நோயால் அதிகம் பாதிக்கப்பட்டமையினால் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார். மரண விசாரணைகளை திடீர்  மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார்…

  • ஈஸ்டர் படுகொலை நூல் !

    ஈஸ்டர் படுகொலை நூல் !

    கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கினைப்புக் குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் எழுதிய ஈஸ்டர் படுகொலை இன – மத நல்லிணக்கம் அறிதலும் புரிதலும் நூல் வெளியிட்டு விழா இடம்பெற்றுள்ளது. நூலின் முதல் பிரதிகள் ஈஸ்டர் குண்டு தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளிற்கு வழங்கி வைத்ததைத் தொடர்ந்து, சர்வமத தலைவர்களுக்கும் நூலின் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டது. கொலைக்குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் பிள்ளையானின் இந்த செயற்பாடு பலரது விமர்சனத்திற்குள்ளாகியது.

  • வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பில் முறைப்பாடு!

    வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பில் முறைப்பாடு!

    வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கைதான எட்டுப்பேரில் 6 பேர் இன்று கொழும்பிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரி மற்றும் சிறிலங்கா காவல்துறையினரது தமிழர்களுக்கு எதிரான இனவாத ஒடுக்குமுறைகளுக்கு துணைபோவதாக அமைந்துள்ள காரணத்தினாலேயே கொழும்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து, கொழும்பிலுள்ள ஐநா அலுவலகத்தில் மனித உரிமை விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரியுடன் நேரில் சந்தித்து சிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில்…