Category: இலங்கை செய்திகள்
-

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு?இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறிதரன்
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவினை வழங்குவது என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது மற்றும் அரசியல் கூட்டணி அமைப்பது குறித்து இந்த மாத இறுதியில் தீர்மானிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் கட்சி பொதுக் கூட்டமொன்றை நடத்த உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி…
-

கொக்குக்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிக்கான நிதி இதுவரை கிடைக்கவில்லை!
முல்லைத்தீவு, கொக்குதொடுவாய் மனித புதைகுழியின் அடுத்த கட்ட அகழ்வு பணிக்கான நிதியானது கிடைக்கும் பட்சத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் அகழ்வு பணி ஆரம்பிக்கப்படும் என முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான குறித்த வழக்கானது இன்றைதினம் (2024.02.22) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. …
-

”தொல்பொருள் எனும் போர்வையில் பௌத்தத்தை விதைக்காதே” கவனயீர்ப்பு போராட்டம்
கடந்த எட்டாம் திகதி சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை சிவன் ஆலய வழிபாட்டின் போது கைது செய்யப்பட்ட எண்மரை விடுதலை செய்யக்கோரியும் அச்சம்பவத்தைக் கண்டித்தும் திருகோணமலை சிவன்கோயிலடிக்கு முன்னிலையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) மாலை இடம் பெற்றது . இப்போராட்டத்தை சமூக செயற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். வழிபாடு எமது அடிப்படை உரிமை ஆதி சிவன் ஆலயம் எமது பூர்வீகம்,ஈழத்தின் சமயத் தலைவர்களை அபகரிக்காதே, தொல்பொருள் எனும் போர்வையில் பௌத்தத்தை விதைக்காதே, வழிபாட்டைத் தடுக்கும்…
-

மட்டக்களப்பு சின்ன ஊறணி மெதடிஸ்த ஆலய பாபர அட்கின்ஸ் சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் ஏற்பாட்டில் சிரமதான நிகழ்வு
மட்டக்களப்பு சின்ன ஊறனி மெதடிஸ்த ஆலய பாபர அட்கின்ஸ் சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், மார்ச் மாத திட்ட நிகழ்வாக சிரமதான பணி இன்று முன்னெடுக்கப்பட்டது. ‘சுற்றாடலை சுத்தமாக பேணி பிளாஸ்டிக் எனும் பேர் அரக்கனை ஒழிப்போம்’ எனும் தொனிப்பொருளில் நிகழ்ச்சி திட்ட பணிப்பாளர் கலாநிதி கே.ஜெ.அருள்ராஜ் தலைமையில், அருட் பணி ஜெகதாஸின் அடிகளாரின் வழிகாட்டலில் சிரமதானம் நடைபெற்றது.
-

கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு- பொலிஸ் மா அதிபர் அதிரடி பணிப்புரை
ஈஸ்டர் ஞாயிறு மற்றும் புனித வெள்ளியை முன்னிட்டு அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் பலத்த பாதுகாப்பு வழங்குமாறும் தேவாலயத்திற்கு வரும் யாத்திரிகர்கள் மற்றும் அவர்களின் பயணப்பொதிகளை பரிசோதிக்கும் வகையில் தேவாலயங்களின் தலைவர்களுடன் கலந்துரையாடி விசேட வேலைத்திட்டத்தை அமுல்படுத்துமாறும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அனைத்து பிரிவுகளுக்கும் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி, பொலிஸ் குழுக்கள் மற்றும் அந்தந்த தேவாலயங்களின் பாதிரியார்கள் மற்றும் அமைப்பாளர்களுடன் இணைந்து வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பணிப்புரை…
-

வெடுக்குமாறிமலை 3000ம் ஆண்டு பழமையான தமிழர்களின் ஆலயம்
வெடுக்குமாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆயலம் 3000ம் ஆண்டு பழமை வாந்தது. அப்பகுதியை சூழ தமிழர்களான நாகர்களே வாழ்ந்துள்ளதாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிப்பதாக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். தொடர்ந்து உரையாற்றிய சிறிதரன், ”பழமையும் பாரம்பரியமும் கொண்ட ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் அடிவாரத்தில் தமிழ் பிராமிய கல்வெட்டுகள் மற்றும் வட்டெழுத்துகளை காண முடியும். வெடுக்குமாறிமலையின்…