Category: இலங்கை செய்திகள்
-

புத்தளத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!
புத்தளம் – மஹகும்புக்கடவல , ஹோம்ப கஸ்வெவ பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவமானது நேற்று (13) மாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது மஹகும்புக்கடவல , ஹோம்ப கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 56 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் விவசாய நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்த போது மின்னல் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளான நபரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மஹகும்புக்கடவல கிராமிய வைத்தியசாலையில் அனுமதித்த…
-

யாழ். வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் ஆலய விசேட பூஜை!
குரோதி வருடப்பிறப்பை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றுள்ளது.விசேட பூஜை வழிபாடுகள் இன்று (14.4.2024) காலை நல்லூர் ஆலயத்தில் இடம்பெற்றுள்ளது.பூஜைகளை தொடர்ந்து முருகப்பெருமான் உள்வீதி வலம் மற்றும் வெளிவீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார்.யாழ்ப்பாணத்திலுள்ள இந்து ஆலயங்களில் நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு சிறப்பு நாட்களில் வழிபாட்டு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருப்பது வழக்கம். அதேபோன்று , இன்று மலர்ந்துள்ள சித்திரை வருடப்பிறப்பு வழிபாட்டுக்கு பல…
-

கிளிநொச்சியில் வீட்டு உரிமையாளரை தாக்கிய மர்மநபர்கள்!
கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் வீடொன்றுக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியதுடன் வீட்டு உரிமையாளர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று (12-04-2024) இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த நபர்கள் மது போதையில் வாள்கள் மற்றும் பொல்லுகளுடன் சென்று தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் கயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-

வவுனியாவில் அரச பேருந்து சாரதி மீது தாக்குதல் முயற்சி!
வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் அரச பேருந்தினை வழிமறித்து தனியார் பேருந்தின் சாரதி, நடத்துனர் தாக்குதல் முயற்சி மேற்கொண்டமையுடன் அச்சுறுத்தலும் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பழைய பேரூந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து தரித்து நின்ற சமயத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து இரு தரப்பினருக்கிடையே வாய்த்தர்க்கமும் இடம்பெற்றுள்ளது. நேரசூசி பிரச்சனை காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
-

யாழில் இடம்பெற்ற கோர விபத்து – அரச அதிகாரி பரிதாப உயிரிழப்பு!
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் அரச அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்து சம்பவமானது நேற்று (11.4.2024) யாழ். கோப்பாய் – கைதடி வீதியில் இடம்பெற்றுள்ளது. இவ் விபத்தில் தென்மராட்சிக் கல்வி வலய தொழில் வழிகாட்டல் ஆலோசனை அதிகாரியான, 56 வயதுடைய கணபதிப்பிள்ளை ஈஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார். பாடசாலை விளையாட்டு போட்டியில் கலந்து கொள்வதற்காக நேற்றைய தினம் வியாழக்கிழமை, கோப்பாய் – கைதடி வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளை எதிரே வந்த டிப்பர் வாகனம் வேக…
-

மட்டக்களப்பு வாழ் மக்களுக்கு எச்சரிக்கை!
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான வெயிலுடனான காலநிலை நீங்கி மழைபெய்துவரும் நிலையில் மக்கள் குடியிருப்புகளை நோக்கி முதலைகள் வருகைதர சாத்தியம் இருப்பதால் மக்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட மக்கள் அதிகளவாக வாழும் கூழாவடி பகுதிக்குள் நுழைந்த முதலையொன்று மக்களினால் பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிக்குள் நீர்நிலைகள் இல்லாதபோதிலும் முதலையொன்று மக்கள் பகுதிக்குள் நுழைந்ததனால் பெரும் பதற்ற நிலைமையேற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
-

மரக்கறி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
யாழ். மாவட்டத்தின் (Jaffna District) பல்வேறு பகுதிகளிலும் மரக்கறி வகைகளின் விலைகள் திடீரென வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது அதிக மரக்கறி வகைகள் சந்தைக்கு வந்து சேர்வதால் அவற்றின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையினை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக மரக்கறிகளின் விலைகள் பன்மடங்கு அதிகரித்த நிலையில் காணப்பட்டு வந்த நிலையில், மீண்டும் மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்து வருகின்றது.
-

பேருந்துகளில் அதிக கட்டணம் அறவிடுவதை கண்டறிய சோதனை நடவடிக்கை!
தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் அறவிடுவதை கண்டறிவதற்காக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் பயணிகளிடம் இருந்து கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சசி வெல்கம தெரிவித்துள்ளார்.
-

யாழ். நகரப் பாடசாலையில் மாணவர்களுக்கு காசநோய்!
யாழ்ப்பாணம் (Jaffna) நகரத்திலுள்ள ஆண்கள் பாடசாலை மாணவர்கள் சிலருக்கு காசநோய் கண்டறியப்பட்டுள்ளது. மேற்படி பாடசாலையில் ஒரு வகுப்பில் கல்வி பயிலும் மாணவனுக்கு உடல் மெலிவு ஏற்பட்ட நிலையில் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அந்த மாணவனுக்குக் காசநோய் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் அவருடன் நெருங்கிப் பழகிய மாணவர்கள் சிலரைப் பரிசோதனைக்கு உட்படுத்திய நிலையில், அவர்களுக்கும் காசநோய் இருப்பது தெரியவந்துள்ளது.
-

யாழ். இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி மலேசியா செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த கைது நடவடிக்கை இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யாழ். சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.கைது சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 2012ஆம் ஆண்டு படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இவர், நாட்டை விட்டு வெளியேறுவதற்கு நீர்கொழும்பு நீதவான்…