Category: இலங்கை செய்திகள்

  • இலங்கையில் இன்று முதல் புதிய விசா நடைமுறை!

    இலங்கையில் இன்று முதல் புதிய விசா நடைமுறை!

    புதிய வீசா முறைமைய இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான விசேட வர்த்தகமானி வெளியிடப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதற்கமைய புதிய வீசா முறைமை, பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைகள் மற்றும் அது தொடர்பான கட்டணங்கள் மற்றும் இலங்கையில் தங்கியிருக்கும் காலம் ஆகியவை 27.11.2023 அன்று விசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

  • வவுனியாவில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி வழிப்பறி!

    வவுனியாவில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி வழிப்பறி!

    வவுனியாவில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களிடம் முகமூடியணிந்த மூவரால் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதன்போது, அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளையும் அபகரித்து கொண்டு கொள்ளையர்கள் தப்பிச்  சென்றுள்ளனர். குறித்த சம்பவமானது, இன்று (17.04.2024) அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.சிறு குழந்தை ஒன்றின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி இவ்வாறு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.  

  • யாழ்.காவல்துறை உத்தியோகஸ்தருக்கு எதிராக முறைப்பாடு

    யாழ்.காவல்துறை உத்தியோகஸ்தருக்கு எதிராக முறைப்பாடு

    யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவர் புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசித்து வருகின்றார். அவருக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ள நிலையில் சுவிஸ் நாட்டில் கணவனை பிரிந்து பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த பெண் யாழ்ப்பாணம் வந்திருந்த போது , பெண்ணின் பூர்வீக…

  • வவுனியாவில் அன்னை பூபதியின் திருவுருவப்படத்திற்கு மக்கள் அஞ்சலி

    வவுனியாவில் அன்னை பூபதியின் திருவுருவப்படத்திற்கு மக்கள் அஞ்சலி

    அன்னை பூபதியின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி வவுனியாவை வந்தடைந்த நிலையில், அவருடைய திருவுருவப்படத்துக்கு மக்கள் அஞ்சலி வெலுத்தியுள்ளனர். நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி இன்று (16.04) வவுனியாவை வந்தடைந்துள்ளது. மேலும், தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்த அன்னை பூபதியின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி வடக்கு – கிழக்கின் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ளது.

  • பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

    பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

    முஸ்லிம் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் அறிவித்தல் வெளியாகி உள்ளது. அந்தவகையில், நாட்டில் உள்ள முஸ்லிம் பாடசாலைகள் நாளைய தினம் (17.4.2024) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாடசாலை இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,2024 ஆம் கல்வி ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதற்கட்ட கல்வி நடவடிக்கைகள் நிறைவடைந்த நிலையில் கடந்த 10 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டது.

  • முக்கிய அரச நிறுவனங்களை விற்பனை செய்ய அரசாங்கம் முயற்சி

    முக்கிய அரச நிறுவனங்களை விற்பனை செய்ய அரசாங்கம் முயற்சி

    நாட்டின் முக்கியமான அரச நிறுவனங்களை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக முன்னிலை சோசலிச கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. கட்சியின் கல்விச் செயலளார் புபுது ஜாகொட இந்த குற்றச்சாட்டைச் முன்வைத்துள்ளார். புத்தாண்டில் அரசாங்கம் முதல் பணியாக அரச நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யும் அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

  • சட்டவிரோதமாக இயங்கிய மருத்துவ நிலையங்கள்!

    சட்டவிரோதமாக இயங்கிய மருத்துவ நிலையங்கள்!

    அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை பிரிவினுள் சட்டவிரோதமாக இயங்கிய 3 போலி மருத்துவ நிலையங்கள் உட்பட அதன் இயக்குநரான போலி வைத்தியரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். பொதுமக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் இடங்கள் மீதான தொடர் சுற்றிவளைப்பின்போது சட்டவிரோத மருத்துவ நிலையம் ஒன்று சாய்ந்தமருது, பாண்டிருப்பு, மருதமுனை பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களுக்கு தொடர்ந்தும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை…

  • வாகனங்களை இறக்குமதி செய்வதில் சிக்கல் நிலை!

    வாகனங்களை இறக்குமதி செய்வதில் சிக்கல் நிலை!

    வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இலங்கையின் பொருளாதாரம் இன்னும் நல்ல நிலையில் இல்லை என  கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார கற்கைகள் பிரிவின் பேராசிரியர் பிரியந்த துனுசிங்க தெரிவித்துள்ளார். மேலும், சுற்றுலா பயணிகளின் வருகை மற்றும் வெளிநாட்டு பணியாளர்கள் நாட்டிற்கு அனுப்பும் பணத்தினால் நாட்டின் பொருளாதாரம் ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் தான் இருப்பதாகவும்  பேராசிரியர் பிரியந்த துனுசிங்க சுட்டக்காட்டியுள்ளார்.

  • யாழில் கோவிட் தொற்றால் வெளிநாட்டில் இருந்து வந்த பெண் உயிரிழப்பு!

    யாழில் கோவிட் தொற்றால் வெளிநாட்டில் இருந்து வந்த பெண் உயிரிழப்பு!

    யாழ். மாவட்டத்தில்  நீண்ட காலத்திற்கு பின்னர் கோவிட் தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த தகவலை யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.பிரான்ஸ்  நாட்டில் இருந்து வந்த 62 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கோவிட் உயிரிழப்பு தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ். மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் பிரான்ஸ் நாட்டில் இருந்து ஆயுள்வேத சிகிச்சைக்காக யாழ்ப்பாணத்திற்கு வந்த 62 வயதான பெண் கோவிட் (COVID 19) கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

  • 14 வயது மாணவியை கடத்திய 17 வயது இளைஞன்!

    14 வயது மாணவியை கடத்திய 17 வயது இளைஞன்!

    14 வயது மாணவியை கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் 17 வயது இளைஞன் ஒருவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த கைது நடவடிக்கை இன்று (15.04.2024) காலை இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி கிரான்குளத்தை சேர்ந்த மேற்படி மாணவியை காதல் என்ற பெயரில் கடத்திச் சென்ற திருகோணமலை  குச்சவெளியைச் சேர்ந்த 17 வயது இளைஞன் கொழும்பில் சில நாட்கள் அவருடன் தங்கியிருந்துள்ளார். அதனையடுத்து, மீண்டும் நேற்று சொந்த இடம் திரும்பி வீட்டில் தங்கியிருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவல்…