Category: இலங்கை செய்திகள்

  • யாழில் சேகம்: காய்ச்சலால் மாணவி உயிரிழப்பு!

    யாழில் சேகம்: காய்ச்சலால் மாணவி உயிரிழப்பு!

    யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் காய்ச்சல் காரணமாக மாணவி ஒருவர் நேற்றுமுன்தினம் (8) இரவு உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்தில் சிறீரங்கநாதன் மதுமிதா எனும் 16 வயதுடைய மாணவியே உயிரிழந்துள்ளார்.கடந்த 7ஆம் திகதி மாணவிக்கு இடையிடையே காய்ச்சல் ஏற்பட்டதால் நேற்றுமுன்தினம் காலை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்படட நிலையில் அன்றிரவே உயிரிழந்துள்ளார். யாழில் நிர்வாணமாக மீட்கப்பட்ட பெண்ணின் சடலத்தால் பரபரப்பு யாழில் நிர்வாணமாக மீட்கப்பட்ட பெண்ணின் சடலத்தால் பரபரப்பு திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார்…

  • வவுனியாவில் பேருந்து விபத்து : மாணவன் படுகாயம்!

    வவுனியாவில் பேருந்து விபத்து : மாணவன் படுகாயம்!

    வவுனியா பத்தினியார் மகிழங்குளம் பகுதியில் பாடசாலைக்கு சென்ற மாணவனை பேருந்து மோதியதில் மாணவன் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று (08.04.2024) காலை இடம்பெற்றுள்ளது.பத்தினியார் மகிழங்குளம் நோக்கி வந்த பேருந்து அதே திசையில் புதுக்குளம் பாடசாலைக்கு துவிச்சக்கர வண்டியில் சென்ற மாணவனை மோதியதிலேயே மாணவன் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்த மாணவன் வவுனியா பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பில் ஈச்சங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  • 15ஆம் திகதி அரச பொது விடுமுறையா?

    15ஆம் திகதி அரச பொது விடுமுறையா?

    எதிர்வரும் 15ஆம் திகதி இலங்கையில் அரச பொது விடுமுறை தினமாக மாற்றுவது தொடர்பில் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15ஆம் திகதியை பொது விடுமுறை தினமாக மாற்றுவது தொடர்பில் இன்றைய அமைச்சரவை கூட்டத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்படவுள்ளது. ஏப்ரல் 14 ஆம் திகதி புத்தாண்டு உதயமாகும் நிலையில், ஏப்ரல் 15 ஆம் திகதி திங்கட்கிழமை வழக்கமான வேலை நாளாக காணப்படுகிறது. எனினும், இது தொடர்பில்  இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை. இவ்வாறு விடுமுறை தினமாக…

  • அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பாக அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு!

    அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பாக அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு!

    இலங்கையில் (Sri Lanka) அரச ஊழியர்களின் ஏப்ரல் மாதத்திற்கான சம்பளம் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என்று நிதியமைச்சு அறிவித்துள்ளது. இந்த சம்பளத்தில் 2024ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட, அதிகரிக்கப்பட்டுள்ள அரச ஊழியர் கொடுப்பனவும் உள்ளடங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, கூடுதலாக ஒவ்வொரு பணியாளருக்கும் 10,000 ரூபாய் கொடுப்பனவு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • வவுனியாவில் மாணவனை தாக்கிய ஆசிரியர் கைது!

    வவுனியாவில் மாணவனை தாக்கிய ஆசிரியர் கைது!

    வவுனியா – சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலையில் தரம் ஒன்று மாணவனை தாக்கிய ஆசிரியை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது இன்று (07.01.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா – சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 2 இல் கல்வி பயிலும் மாணவன் கடந்த 03ஆம் திகதியன்று பாடசாலை முடிந்து வீட்டிற்கு சென்ற நிலையில் மாணவனின் முகத்திலும், தலையிலும் அடிகாயங்கள் காணப்பட்டதை அடுத்து பெற்றோர் மாணவனிடம் விசாரித்ததில் அவரது ஆசிரியை தாக்கியதாக தெரிவித்துள்ளான்.…

  • மதுபானசாலைகள் மூடப்படும் தினங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

    மதுபானசாலைகள் மூடப்படும் தினங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

    எதிர்வரும் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது. தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இந்த நாட்களில் மதுபானசாலைகளை மூட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் எதிர்வரும் மே மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையான காலப்பகுதி வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது

  • இலங்கையில் ஏப்ரல் 15ஆம் திகதி பொது விடுமுறையா?

    இலங்கையில் ஏப்ரல் 15ஆம் திகதி பொது விடுமுறையா?

    எதிர்வரும் ஏப்ரல் 15ஆம் திகதியை பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்த எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டிற்கான சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளான 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில் எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 15ஆம் திகதியை பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துமாறு அரச அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது. எனினும் இந்த…

  • அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல்!

    அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல்!

    எதிர்வரும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போலி நாணயம் மற்றும் வழிப்பறி வியாபாரிகள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.சிங்கள மற்றும்தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக மக்கள் பல்வேறு பொருட்களை அதிகளவில் கொள்வனவு செய்வதாக தெரிவித்த பொலிஸார், பல்வேறு கடத்தல்காரர்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் எச்சரித்துள்ளனர். இதேவேளை, பண்டிகைக் காலங்களில் மக்கள் சுற்றுலா செல்ல வேண்டிய விதம் குறித்தும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விளக்கமளித்துள்ளார்.  

  • நடைமுறைக்கு வரவுள்ள புதிய திட்டம்!

    நடைமுறைக்கு வரவுள்ள புதிய திட்டம்!

    குழந்தை பிறக்கும் போது பிரசவ அறைக்கு தந்தையை அனுமதிக்கும் புதிய திட்டம் மருத்துவமனையில் செயல்படுத்தப்படவுள்ளதாக காசல் மகளிர் மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் அஜித் தண்டநாராயணா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,மகப்பேறு அறையில் ஒவ்வொரு தாய்க்கும் தனித்தனி அறைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.அத்துடன், பிரசவத்தின் போது கணவனுடன் தங்கிச் செல்லும் திட்டத்தின் மூலம் தாயால் குழந்தையை நல்ல மனநிலையில் பிரசவிக்க முடியும் என தெரியவந்துள்ளது.

  • பாடசாலையில் உயிரிழந்த மாணவன் விவகாரம் அதிபருக்கு கிடைத்த தண்டணை!

    பாடசாலையில் உயிரிழந்த மாணவன் விவகாரம் அதிபருக்கு கிடைத்த தண்டணை!

    மஸ்கெலியா பாடசாலையொன்றில் கொங்கிரீட் குழாய் ஒன்று சரிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டு நேற்றையதினம் ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபட்ட போது நீதவான் நால்வரையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, ஹட்டன் வலய கல்வி பணிமனை அதிகாரிகள் நேற்றையதினம்(05) குறித்த பாடசாலைக்கு விஜயம் செய்தனர். இதன்போது பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் ஆகியோரும் ஒன்றுகூடினர். அதேவேளை மாணவன் இறப்புக்கு…